கல்லூரி மாணவனின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி; ரஸ்யாவில் சம்பவம்

ரஷ்யாவின் பெர்ம் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் நேற்று (செப்.20)  காலை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று ரஷ்யாவின் விசாரணை குழு தெரிவித்துள்ளது.

பெர்ம் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் ஒருவர் கல்லூரி வளாகத்தில் சரமாரியாகத் துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். முதல் தளத்தில் இருந்த ஏராளமான மாணவர்கள் ஜன்னல்கள் வழியாக கீழே குதித்து தப்பி ஓடினார்கள். மேலும் மற்றைய மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களும் தங்கள் இருந்த அறைகளை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்தனர் என்றும் விசாரணைக் குழு தெரிவித்தது.

தாக்குதல் நடத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்ற மாணவரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here