வற்றிவரும் நீர்;சூயஸ் கால்வாயில் கப்பல்கள் செல்ல தடை

சூயஸ் கால்வாயில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் கப்பல்கள் செல்ல தடை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய தரைக்கடலில் அமைந்துள்ள சூயஸ் கால்வாய் மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட மிகப்பெரிய கால்வாய் ஆகும். இது ஐரோப்பா-ஆசியா நாடுகள் இடையே வர்த்தகம் எளிதாக நடைபெறுவதற்கு உருவாக்கப்பட்டது.

80 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த கால்வாய் வழியாகவே உலக பொருளாதாரத்தில் 6 சதவீத வர்த்தகம் நடைபெறுகிறது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த கால்வாயில் கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால் போதுமான அளவுக்கு தண்ணீர் இல்லை. இதனால் அந்த வழியாக செல்லும் கப்பல்கள் தரை தட்டும் அபாயம் உள்ளது. எனவே குறைந்தது ஒரு வருடத்துக்கு இந்த கால்வாய் வழியாக கப்பல்கள் செல்ல தடை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது படகுகள் மட்டுமே இந்த கால்வாயில் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. தினசரி இந்த கால்வாயில் செல்ல சுமார் 90 படகுகள் வரிசையில் நிற்கும். ஆனால் தற்போது 130 படகுகள் கால்வாய்க்கு வெளியே வரிசையில் நின்று செல்லும் நிலை உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here