நேற்றுவரையுள்ள (செப்.22) நிலவரப்படி 41 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் நேற்றுவரையுள்ள (செப்.22) நிலவரப்படி மொத்தம் 41,247,271 கோவிட் -19 தடுப்பூசி அளவுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கோவிட் -19 தடுப்பூசி விநியோகம் (JKJAV ) சிறப்பு குழு தெரிவித்துள்ளது .

டுவிட்டரில் JKJAV வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, நாட்டிலுள்ள வயது வந்தோரில் (Adult)  22,348,422 பேர் அல்லது 93.3 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் கோவிட் -19 தடுப்பூசியின் ஒரு டோஸ் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 18,986,347 பேர் அல்லது 81.0 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசியின் இரு டோஸ்களையும் செலுத்தியுள்ளனர்.

நேற்று மட்டும் மொத்தம் 321,342 டோஸ் கோவிட் -19 தடுப்பூசி  வழங்கப்பட்டதாகவும் JKJAV தெரிவித்துள்ளது.

இதில், 121,631 பேர் கோவிட் -19 தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றனர், அதே நேரத்தில் 199,711 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்தி  தங்கள் தடுப்பூசிகளை நிறைவு செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here