இன்று 4,087 பேருக்கு கோவிட் தொற்று

கடந்த 24 மணி நேரத்தில் 4,087 கோவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சமீபத்திய எண்ணிக்கை நேற்று பதிவு செய்யப்பட்ட புதிய தொற்றுநோய்களில் இருந்து 157 தொற்று குறைந்துள்ளது.

மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 2,627,903 ஆக உள்ளது என்று சுகாதார தலைமை இயக்குநர்  டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். CovidNow போர்ட்டலின் படி, கடந்த ஏழு நாட்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 5.4% குறைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here