சோமாலியாவில் தற்கொலை கார் வெடிகுண்டு தாக்குதல்; 8 பேர் பலி!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் தற்கொலை கார் வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சோமாலியாவின் தலைநகர் Mogadishu-வில் அதிபர் மாளிகைக்கு அருகில் உள்ள சந்திப்பில் இந்த தற்கொலை கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு அல்-கொய்தாவுடன் தொடர்புடைய இஸ்லாமியக் குழுவான அல்-ஷபாப் பொறுப்பேற்றுள்ளது.

அதிபர் மாளிகைக்கு அருகில் உள்ள சந்திப்பில் பொலிஸ் சோதனை சாவடி அமைத்து அவ்வழியாக வந்த வாகனங்கள் தடுத்து சோதனை செய்து வந்துள்ளனர். இதன்போது அவ்வழியாக வந்த கார் ஒன்றை போலீசார் தடுத்து சோதனை செய்த போது, ஓட்டுநர் காரில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார்.

இதில், இராணுவ வீரர், தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் என 8 பேர் கொல்லப்பட்டதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், பிரதமர் Mohammed Hussein Roble-ன் அலுவலகத்தில் பெண்கள் மற்றும் மனித உரிமை விவகாரங்களின் ஆலோசகர் Hibaq Abukar இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

சோமாலியாவில் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி வரும் அல்-ஷபாப் குழு, அரசாங்கத்தை கவிழ்த்து, அதன் சொந்த கடுமையான இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்துவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here