கோலாலம்பூர்: கோவிட் -19 தொற்றுநோய் உட்பட உலகளாவிய சுகாதார அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதனால், உலக நாடுகள் ஒரு குடும்பமாக ஒன்றிணைந்து அவற்றை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் நேற்று ஐக்கிய நடுகள் சபையில் ஆற்றிய தனது முதல் உரையில் கூறினார்.
முன் பதிவு செய்யப்பட்ட வீடியோ மூலம் ஐ.நா பொதுச்சபையில் உரையாற்றிய அவர், மலேசியா தொற்றுநோயை சமாளிக்க உறுதிபூண்டுள்ளது, ஆனால் “இன்றைய சோகமான உண்மை என்னவென்றால், உலகம் கோவிட் -19 க்கு எதிரான போரில் வெற்றி பெறுவதில் இருந்து வெகு தொலைவில் உள்ளது” என்றார்.
இத்தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், பெரும்பாலான தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடுகளும், நிதி வசதியும் உள்ள நாடுகள் ஓரளவு வெற்றியை அடைந்தாலும், உலக மக்கள்தொகையில் பெரும்பான்மையானவர்கள், முக்கியமாக நடுத்தர வருமானம் மற்றும் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை.
இருப்பினும், நாம் கவனம் செலுத்த வேண்டிய மற்ற அம்சங்களும் இருப்பதால் தடுப்பூசிகளில் மட்டும் கவனம் செலுத்தக்கூடாது, என்றார்.
பொது சுகாதாரத்தை நாடுகள் தமக்கான பிரத்தியேக களமாக பார்க்காமல் ,அதை உலகளாவிய பொது நலமாக கருத வேண்டும் என்றும் தெரிவித்தார்.
“இந்த எதிர்பாராத காலங்களில் மனிதகுலம் ஒரு பெரிய குடும்பம் என்பதை அங்கீகரித்து, அதனை எங்கள் பொதுப்பணியாக கொண்டு சேவையாற்றுவதோடு, இது இந்த தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு மட்டுமல்லாமல், மற்றய உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளுக்கும் நாம் அதிக ஒத்துழைப்பை உறுதி செய்யவும் உதவும் என்றார்.
அந்த மனநிலையில்தான் மலேசியா “நம்மை கேலுவர்க்க மலேசியா (keluarga Malaysia)” என்று குறிப்பிட்டது.
தொற்றுநோயின் பாதிப்பிலிருந்து உலகம் வெளிவருவதையிட்டு மலேசியா மகிழ்ச்சியடைவது மட்டுமல்லாமல் மீண்டும் அனைத்து வகையிலும் வளர்ச்சியடையும் என்றும் பிரதமர் இஸ்மாயில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.