கிளந்தானில் தோலை வெண்மையாக்கும் சிகிச்சைக்காக, உறவினர் மூலம் 95,000 வெள்ளியை இழந்த பெண்!

கோத்தா பாரு: அழகிய சருமத்தைப் பெற்றுக்கொள்ளுவதில் மிகுந்த ஆர்வமாக இருந்த 20 வயதுக்குட்பட்ட பெண் ஒருவர், ஒரு பிரபல அழகு நிலையத்தின் ஊழியர் என்று கூறிக்கொண்ட அவரது உறவினரால் வழங்கப்பட்ட சருமத்தை வெண்மையாக்கும் சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடிவு செய்தார்.

இருப்பினும், அப்பெண்ணின் ஆசை நிறைவேறாமல் போனதால், அப்பெண் தனது உறவினரால் ஏமாற்றப்பட்டார். இதன் விளைவாக அவருக்கு சுமார் 95,000 வெள்ளி இழப்பு ஏற்பட்டது.

மோசமான விஷயம் என்னவென்றால், அப்பெண்ணிற்கு வழங்கப்பட்ட “சிகிச்சை” அவருக்கு மருத்துவ ரீதியிலான பிரச்சினைகளைக் கூட ஏற்படுத்தியிருக்கலாம்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பல மாதங்களாக இந்த சிகிச்சை நடந்ததாக பாதிக்கப்பட்ட பெண் கூறியதாக கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷஃபியன் மமத் கூறினார்.

“தும்பட்டை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, அவரது உறவினர் மூலம் தோல் வெண்மையாக்கும் சிகிச்சைகள் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

“மாநில தலைநகரில் உள்ள ஒரு பிரபலமான அழகு சிகிச்சை மையத்தில் பணிபுரிந்ததால், பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை வழங்குவதற்கு தேவையான தகுதிகள் இருப்பதாக அந்த உறவினர் கூறினார்.

மேலும் “இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பிரபல அழகு நிலையத்தில் இருந்து (சிகிச்சைக்காக) மருந்து வாங்கியதாகத் தெரிவித்ததை தொடர்ந்து, சந்தேக நபரின் வீட்டில் தான் குறைந்தது 17 சிகிச்சைகள் செய்திருப்பதாக பாதிக்கப்பட்ட பெண் கூறினார்” என்று நேற்று (செப்.29) இரவு ஓர் அறிக்கையில் கூறினார்.

இரண்டு மாத காலப்பகுதியில், பாதிக்கப்பட்டவருக்கு “ஃபேஸ் ஜப் (face jab)” மற்றும் “ட்ரிப்பிங் (dripping)” எனப்படும் இரண்டு வகையான சிகிச்சைகளுக்காக கட்டம் கட்டமாக பணம் செலுத்தியதாகவும் அதன் மொத்த தொகை 95,000 வெள்ளி எனவும் பாதிக்கப்பட்ட பெண் கூறினார்.

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், பாதிக்கப்பட்டவருக்கு கடுமையான தோல் பிரச்சினைகள் ஏற்பட ஆரம்பித்ததாகவும், உள்ளூர் மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்ற பின்னரே, பாதிக்கப்பட்டவருக்கு தவறான தோல் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் “அவரது தோல் பிரச்சனை சிறுநீரக பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்றும் மருத்துவ மையம் அவரிடம் கூறியது.

இவற்றை கேட்டதால் பயந்து போன பாதிக்கப்பட்ட பெண், அழகு சிகிச்சை மையத்தை (பாதிக்கப்பட்டவர் வேலை செய்வதாக கூறிய மையத்தை) தொடர்பு கொள்ள முடிவு செய்தார், ஆனால் அவருக்கு சிகிச்சை வழங்கிய அவர் உறவினர் அந்த சிகிச்சை மையத்தின் ஊழியர்களில் ஒருவர் இல்லை என அவர் கண்டறிந்தார்.

மேலும் “அழகு சிகிச்சை மையத்தின் செய்தித் தொடர்பாளர், அவர்களிடம் சிகிச்சை பெறும் எவருக்கும் அவர்களுடைய வளாகத்திற்கு வெளியே சிகிச்சைகள் நடத்த அனுமதிக்கவில்லை என்றும் கூறினார்” என்று ஷஃபியன் மேலும் கூறினார்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்ட பெண் இன்று தும்பட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here