சிலாங்கூரில் 1,000 பகுதிகளில் அக்டோபர் நடுப்பகுதியில் நீர் விநியோத் தடை ஏற்படும்

சிலாங்கூரில் ஏறக்குறைய 1,000 பகுதிகளில் நீர் வழங்கல் இடையூறுகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு நிலையம் 1 (எஸ்எஸ்பி 1 டபிள்யூடிபி) மூடப்படுவது, அக்டோபர் 13 முதல் 16 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மாநிலத்தில் 998 பகுதிகளில் நீர் விநியோகத்தை பாதிக்கும் என்று ஆயர் சிலாங்கூர் தெரிவித்துள்ளது.

அவற்றில் பெட்டாலிங், கிள்ளான், ஷா ஆலம், கோம்பாக், கோலாலம்பூர், ஹுலு சிலாங்கூர், கோலா லங்கட் மற்றும் கோலா சிலாங்கூர் ஆகியவை அடங்கும்.

இன்று ஒரு அறிக்கையில், ஆயர் சிலாங்கூர் தலைமை நிர்வாக அதிகாரி சுஹைமி கமரால்ஜாமன், மேம்படுத்தல் மற்றும் பராமரிப்புப் பணிகள் 2019 மற்றும் கடந்த ஆண்டு திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால் பெரிய அளவில் திட்டமிடப்படாத நீர் வழங்கல் தடங்கலை ஏற்படுத்திய நீர் மாசுபாடு சம்பவங்களைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது.

நுகர்வோர் வளாகத்தின் தூரம் மற்றும் விநியோக அமைப்பில் உள்ள நீர் அழுத்தத்தைப் பொறுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் வழங்கல் இடையூறு மற்றும் மீட்பு காலம் மாறுபடும் என்றார்.

வழங்கல் தடங்கல் காலத்தில் போதுமான தண்ணீரை சேமிக்குமாறு நுகர்வோருக்கு சுஹைமி அறிவுறுத்தினார். மருத்துவமனைகள் மற்றும் டயாலிசிஸ் மையங்கள் மற்றும் இறுதிச் சடங்குகள் போன்ற முக்கியமான இடங்களில் பயன்படுத்த 105 தண்ணீர் டேங்கர்கள் தயாராக உள்ளன என்றார்.

ஆயர் சிலாங்கூர் அக்டோபர் 14 முதல் 16 வரை 18 பொது நீர் குழாய்களை வழங்கும். மேலும் வணிக நுகர்வோருக்கு தங்கள் சொந்த டேங்கர்களைப் பயன்படுத்தி நீர் நிரப்பும் நிலையங்கள் வழங்கப்படும்.

ஆயர் சிலாங்கரின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகள் அல்லது அதன் 15300 ஹாட்லைன் எண் மூலம் அவ்வப்போது நுகர்வோருக்கு தகவல் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here