கோலாலம்பூர்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரும் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) தைப்பூச கொண்டாட்டத்திற்கு முன்னதாக வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) பிற்பகல் பத்துமலைக்கு வருகைப் புரிவார் என்று தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவுத்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்தார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வருகை அன்வாருக்கு பத்து மலை கோவிலில் திருவிழாவிற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கவும் உதவும் என்றார். இந்திய சமூக விவகாரங்களை மேற்பார்வையிடும் பொறுப்பில் உள்ள ரமணன், புதன்கிழமை (பிப்ரவரி 5) மாலை அன்வர் இந்த வருகை குறித்து தனக்குத் தெரிவித்ததாகக் கூறினார்.
தைப்பூசத்திற்கு முந்தைய ஏற்பாடுகளை கவனிக்கவும், இந்திய சமூகத்துடன் நேரத்தை செலவிடவும் பிரதமர் விருப்பம் தெரிவித்தார். இந்த ஆண்டு பத்துமலை தைப்பூசத்தில் கலந்து கொள்ள பிரதமர் ஆவலுடன் காத்திருக்கிறார் என்று வியாழக்கிழமை (பிப்ரவரி 6) பெர்னாமா தொடர்பு கொண்டபோது சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.








