செத்தியா ஆலாம் சொகுசுமாடிக் குடியிருப்பின் 23 வது மாடியில் இருந்து விழுந்து பெண் மரணம்- சந்தேக நபர் கைது

ஷா ஆலாம்:

காதலர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, செத்தியா ஆலாமில் உள்ள ஒரு சொகுசுமாடிக் குடியிருப்பின் 23 வது மாடியில் இருந்து, காதலனால் தள்ளிவிடப்பட்டதில் தாய்லாந்து நாட்டுப்பெண் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று (பிப்ரவரி 28) இரவு 10.02 மணிக்கு இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு புகார் கிடைத்தது என்று ஷா ஆலம் OCPD துணை ஆணையர் இக்பால் இப்ராகிம் கூறினார்.

“சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட பெண் காண்டோமினியத்தின் 23 வது மாடியில் இருந்து தள்ளப்படுவதற்கு முன்பு, சந்தேக நபரும் அப்பெண்ணும் வாக்குவாதம் செய்தனர்” என நம்பப்படுகிறது என்று, இன்று (பிப்ரவரி 29) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

“ இச்சம்பவம் தொடர்பில் 37 வயதான சந்தேக நபரை இரவு 10.10 மணியளவில் குற்றம் நடந்த இடத்தில் வைத்து கைது செய்தோம்” என்று அவர் கூறினார்.

லோரி ஓட்டுநராக பணிபுரியும் சந்தேக நபர், ஏழு முந்தைய குற்றங்கள் கொண்டவர் என்றும், அவர் கஞ்சா பயன்படுத்தியதாக சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது என்றும் ஏசிபி முகமட் இக்பால் கூறினார்.

“சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக விளக்கமறியலில் வைக்கப்படுவார் என்று சொன்ன அவர், இவ்வழக்கு கொலைக்கான தண்டனைச் சட்டம் பிரிவு 302 இன் கீழ் வழக்கை விசாரிக்கப் படுகிறது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here