சுங்கை பட்டாணி:
கெடா- ஜாலான் சுங்கை எமாஸ், கோத்தா கோலா மூடாவில் உள்ள இரண்டு மாடி கடையின் 8 அலகுகள் இன்று அதிகாலை தீப்பிடித்ததில் 90 வயது மூதாட்டி, அவரது மகள் மற்றும் மருமகன் ஆகியோர் உயிரிழந்தனர்.
உயிரிழந்த தம்பதியினர் பலசரக்கு பொருட்கள் விற்கும் கடை நடத்தி வருவதாகவும், தீ விபத்து ஏற்பட்ட போது மனைவியின் 90 வயது தாயார் வளாகத்தில் இருந்ததாகவும் நம்பப்படுகிறது.
தீ விபத்தில் சிக்கிய முதல் உடல் அதிகாலை 3.19 மணிக்கும், இரண்டாவது உடல் காலை 6 மணிக்கும் மற்றையவரின் உடல் பின்னரும் கண்டெடுக்கப்பட்டது என்று மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) கெடா மாநில இயக்குநர், Awang Hidzel Awang Bujang கூறினார்.
-(புதுப்பிக்கப்பட்ட செய்தி)



















