தென் அமெரிக்காவின் இக்குவடோரில் நடந்த சிறைச்சாலை கலவரத்தில் 116 பேர் பலி

இக்குவடோரில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடந்த சிறைச்சாலை கலவரத்தில் 116 கைதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 80 கைதிகள் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டு அதிபர் கில்லர்மோ லாசா தெரிவித்தார்.

தென் அமெரிக்க வரலாற்றில் நடந்த மிகக்கொடிய சிறைச்சாலை சண்டைகளில் ஒன்றாக இது உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

ஈக்குவடோரின் துறைமுக நகரமான குயாஸ் மாகாணத்தில் உள்ள Penitenciaria del Litoral சிறை வளாகத்திலேயே இக்கலவரம் நடந்தது. சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த இரண்டு கும்பல்கள் மோதிக்கொண்டன. அப்போது மோதல் முற்றிய சமயத்தில் துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்கிக் கொண்டனர். இதற்கும் மெக்சிக்கன் போதை மருந்து கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளன.

400 க்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்ததாக ஈக்குவடோர் தேசிய போலீஸின் அதிகாரபூர்வ டுவிட்டர் தளத்தில் கடந்த வியாழக்கிழமை ஓர் பதிவினூடாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here