7 கொள்கலன்களில் வசித்து வந்த 297 வெளிநாட்டவர்கள் குடிநுழைவுத் துறையினரால் கைது

சிலாங்கூர் செமினி பகுதியில் ஏழு கொள்கலன்களில் வசித்து வந்த கிட்டத்தட்ட 300 சட்டவிரோத குடியேறியவர்கள் குடிநுழைவுத் துறை அதிகாரிகளின் நள்ளிரவு சோதனையில் தடுத்து வைக்கப்பட்டனர்.

குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் கைருல் ஜைமி தாவுத் கூறுகையில், எங்கள் அதிகாரிகள்  ஜாலான் எக்கோ மெஜஸ்டிக் 1/2c இல் உள்ள கட்டுமானத் தளத்தில் சோதனை செய்து அங்கிருந்த 326 பேரில் 297 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இந்தோனேசியா, பங்களாதேஷ், மியான்மர், வியட்நாம் மற்றும் கானா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள். பல வெளிநாட்டு பெண்கள், குறிப்பாக வியட்நாமில் இருந்து வருவது, அவர்கள் ஒழுக்கக்கேடான செயல்களைச் செய்வதாக சந்தேகிக்கப்படுவதால் சந்தேகங்களை எழுப்புகிறது  கைருல் கூறினார்.

அருகில் உள்ள குடியிருப்புவாசிகளின் புகார்களின் விளைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார். அவ்வட்டார  குடியிருப்பாளர்கள் வெளிநாட்டினர் அப்பகுதியில் அதிகமாக இருப்பதாகவும்,அவர்கள் சுகாதார அம்சங்களுக்கு இணங்காததாகவும், அதனால் டெங்கு அதிகரிக்கும்  சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் புகார் தெரிவித்தனர் என்று அவர் சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

பெரும்பாலான வெளிநாட்டவர்கள் உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறைகளில் வேலை செய்வதாகவும், சிலர் சொந்தத் தொழில் நடத்துவதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here