காதலுக்காக அரச பட்டத்தை துறந்த ஜப்பானின் இளவரசி

ஜப்பான் இளவரசி மகோ, தன்னுடைய கல்லூரி நண்பரை அக்டோபர் 26 ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் 125-வது பேரரசர் அகிஹிட்டோவின் பேத்தியான மகோ, 2012-ம் ஆண்டு தான் கல்லூரியில் படித்த போது தன்னுடன் படித்த கீ கோமுரோவுடன் நட்பில் ஆரம்பித்த அவர்களது உறவு காதலில் முடிந்தது.

கீ கோமுரோ சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர், எனினும் இருவரும் திருணம் செய்து கொள்ளப்போவதாக 2017-ம் ஆண்டு அறிவித்தனர்.

முன்னதாக, இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவதற்காக நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் மகோவும் கெய்கோமுரோவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிலையில் இருவரது திருமணம் அக்டோபர் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச குடும்பத்திலிருந்து வெளியே ஒருவரை திருமணம் செய்து கொள்ளும் பட்சத்தில், அவர் அரசு குடும்பத்தை விட்டு வெளியேற நேரிடும். அந்த வகையில், ஜப்பான் இளவரசி அரச பட்டத்தை துறக்கவுள்ளார்.

அரச திருமணங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் யாவும் இந்த திருமணத்தில் நடைபெறாது. அதேபோல், அரச குடும்பத்திலிருந்து வெளியேறும் நபர்களுக்கு கோடி கணக்கில் பணம் அளிப்பது வழக்கம். ஆனால், மகோ அதனையும் மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மகோவும் கெய்கோமுரோவும் உள்ளூர் அரசு அலுவலகத்தில் தங்களின் திருமணத்தை பதிவு செய்யவுள்ளார்கள். தொடர்ந்து இருவரும் அமெரிக்காவில் குடியேறவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here