கோவிட்-19 நேற்றைய இறப்புகள் 118

சுகாதார அமைச்சகம் அதன் கிட்ஹப் தரவுத்தளத்தில் நேற்று 118 கோவிட் -19 இறப்புகளை அறிவித்தது. அதில் 27 பேர் கொண்டு  சேர்க்கப்பட்டவர்க்ள் (BID) என வகைப்படுத்தப்பட்டனர். இறப்பு எண்ணிக்கை இப்போது 26,683 ஆக உள்ளது.

அதில் அதிகமாக  பேராக்கில் 26  இறப்புகள் பதிவாகியுள்ளன.அதைத் தொடர்ந்து சபா மற்றும் பினாங்கு (தலா 14), கெடா (13), சரவாக் (12), கிளந்தான் (ஒன்பது), சிலாங்கூர் (எட்டு), பகாங் (மூன்று) மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் (தலா இரண்டு) மற்றும் பெர்லிஸ், தெரெங்கானு, கோலாலம்பூர் மற்றும் லாபுவான் (தலா ஒன்று).கிளந்தான் மற்றும் புத்ராஜெயாவில் எந்த இறப்பும் இல்லை.

நள்ளிரவு நிலவரப்படி 150,317 செயலில் உள்ள தொற்றுகள் உள்ளன. இதில் 806 தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ICU), 478 பேருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது. 14,454 மீட்புகளும் பதிவாகியுள்ளன. மலேசியாவில் பதிவான மொத்த கோவிட் -19 தொற்றுகளின் எண்ணிக்கை 2,277,565 ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here