கூச்சிங்: சரவாக் மாநிலத்தில் உள்ள இரண்டு பள்ளிகளை சேர்ந்த 3 ஆசிரியர்களுக்கு கோவிட் -19 தொற்று உறிதிப்படுத்தப்பட்டதை அடுத்து அந்த இரண்டு பள்ளிகளையும் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பள்ளிகள் செக்கோலா மெனெங்கா கெபாங்சஹான் (SMK) ட்ரூஸன் மற்றும் SMK மெராபோக் என்பனவாகும். இவ்விரு பள்ளிகளும் லாவாஸ் மாவட்டத்தில் உள்ளன என்று துணை கல்வி அமைச்சர் டத்தோ முஹமட் அலாமின் கூறினார்.
சில நாட்களுக்கு மேற்கொள்ளப்பட்ட திரையிடலின் விளைவாக SMK ட்ரஸானை சேர்ந்த ஓர் ஆசிரியருக்கும் மற்றும் SMK மெராபோக்கிலிருந்து இரண்டு ஆசிரியர்களும் கோவிட்-19 க்கு நேர்மறையான பதிலை பெற்றனர்.
பள்ளிகளை மீண்டும் திறப்பதில் சுகாதார அமைச்சகமும் கல்வி அமைச்சகமும் இணைந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
“இரு பள்ளிகளும் அக்டோபர் 6 வரை மூடப்படும் என்று சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது,” என்று இன்று இங்கே செக்கோலா கேபாங்சஹான் பெண்டிடிகான் காஸ் தாமான் மாதங் ஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
SMK செயின்ட் தாமஸ் மற்றும் தாமான் மாதங் ஜெயா சிறப்பு கல்வி பள்ளி ஆகியன இன்று மீண்டும் திறப்பதை கண்காணிக்கும் வகையில் அவர் இன்று அப்பள்ளிகளுக்கு சென்றார்.
மாணவர்களின் வருகை 100 விழுக்காட்டை எட்டவில்லை என்றாலும் அவர்களது வரவில் திருப்தி அடைந்ததாக அவர் கூறினார்.
“SMK செயின்ட் தாமஸ் பள்ளி படிவம் 6 மாணவர்களில் 86.2 விழுக்காடு அல்லது 111 மாணவர்கள் கலந்து கொண்டனர் என்றும் தாமான் மாதங் ஜெயாவின் சிறப்பு கல்வி வகுப்பில் மொத்தம் 89 மாணவர்களில் 69 பேர் பள்ளிக்கு திரும்பினர்,” என்றும் அவர் கூறினார்.
மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்குத் பள்ளிக்கு திரும்ப அனுப்புமாறு அவர் வலியுறுத்தினார், அது பாதுகாப்பானது என்றும் அவர்களுக்கு உறுதியளித்தார்.
“மாணவர்களின் பாதுகாப்புத்தான் எங்கள் அனைவரதும் முன்னுரிமை மற்றும் வைரஸ் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்று அவர் கூறினார்.





















