டிக்டோக் (TikTok) சவாலை முடிக்கும் முயற்சியில் 23 காந்தங்களை விழுங்கிய 6 வயது சிறுமி

இங்கிலாந்தில் 6 வயதுடைய ஒரு சிறுமி 23 காந்தங்களை விழுங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள சசெக்ஸ் பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய சிறுமி, டிக்டாக்கில் ஒரு சவாலை மேற்கொண்டுள்ளார்.

இதற்காக, 23 காந்தங்களை ஒரே சமயத்தில் அவர் விழுங்கியதனால், வயிற்றுவலி, குமட்டல் மற்றும் வாந்தியால் அவதிப்பட்டுள்ளார்.

இதனையடுத்து , சிறுமியின் பெற்றோர் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் சிறுமியை பரிசோதித்த பின்பு, வயிற்றிலிருந்த 23 காந்தங்களை அறுவை சிகிச்சை செய்து நீக்கியுள்ளனர்.

குடலுக்கு இடையில் காந்தங்கள் மாட்டிக் கொண்டதில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த மருத்துவர்கள், சரியான நேரத்தில் சிறுமியை மருத்துவமனையில் அனுமதிக்கவில்லையெனில் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது பல முயற்சிகளுக்குப் பின்பு, சிறுமி நன்றாக இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here