6 மணி நேரத்தில் 7 பில்லியன் அமெரிக்க டாலரை இழந்த ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்!

உலகம் முழுவதும் ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகள் திடீரென நேற்றிரவு முடங்கியது. இந்த தகவலை உறுதிப்படுத்திய வாட்ஸ் ஆப் நிறுவனம், “பலருக்கு எங்களுடைய சேவை கிடைக்காமல் போனதை அறிந்துள்ளோம். அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அது பற்றிய தகவலை இங்கே பதிவிடுகிறோம்” என்று பதிவிட்டிருந்தது.

ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் நிறுவனங்களின் தலைவர் மார்க் ஸக்கர்பர்க்கும் சேவை பாதிக்கப்பட்டதால் ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிப்பு கோரியிருந்தார். உலகம் முழுவதும் ஏராளமானோர் இந்த செயலிகளை பயன்படுத்தி வருவதாலும், அலுவல் ரீதியாகவும் இவைகள் உபயோகிக்கப் படுத்தப்படுவதாலும், அதன் பயனாளர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

இதைத்தொடர்ந்து, உலகம் முழுவதும் பல பகுதிகளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கிய இந்த செயலிகள் 6 மணி நேரத்திற்கு பிறகு சரி செய்யப்பட்டது. இந்த நிலையில், ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் சேவை பாதிக்கப்பட்டதன் விளைவாக அந்நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸக்கர்பர்க்குக்கு சுமார் 7 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கப் பங்குச் சந்தையில் ஃபேஸ்புக் சந்தை மதிப்பு 5 சதவீதம் சரிந்தது. இதன் காரணமாக மார்க் ஸக்கர்பர்க்குக்கு 7 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மார்க் ஸக்கர்பர்க்கின் சொத்து மதிப்பு 121.6 பில்லியன் அமெரிக்க டாலர் சரிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்திலிருந்து ஐந்தாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here