மின்னியல் புகைத்தல் நிலையத்தின் காசாளரை, பாலியல் தொந்தரவு செய்த இராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்

பெட்டாலிங் ஜெயா: அம்பாங்கில் உள்ள ஒரு மின்னியல் புகைத்தல் நிலையத்தின் காசாளரை, பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஒரு இராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.

26 வயதான அந்த நபர் இன்று அதிகாலை 12:30 மணியளவில், தாமான் செத்தியாவங்சாவில் உள்ள ஒரு வீட்டில் கைது செய்யப்பட்டதாக அம்பாங் ஜெயா போலீஸ் தலைவர் முகமட் ஃபாரூக் எஷாக் கூறினார்.

சந்தேகத்திற்குரிய இராணுவ அதிகாரி,  பத்து கன்டோன்மென்ட் முகாமில்  கடந்த ஏழு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

“சம்பவத்தின் போது அவர் அணிந்திருந்த சீருடையையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்” என்று அவர் கூறினார்.

சந்தேக நபருக்கு நடத்தப்பட்ட சிறுநீர் சோதனையில் அவர் எந்த ஒரு போதைப் பொருளும் எடுத்துக் கொண்டதற்குரிய சாத்திய கூறுகள் காணப்படவில்லை என்று  பரூக் கூறினார், மேலும் இவ்வழக்கு தொடர்பான  விசாரணைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன என்றார்.

குற்றவியல் சட்டம் பிரிவு 354ன் கீழ் சந்தேக நபர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அக்டோபர் 5 ஆம் தேதி, சந்தேக நபர் தாமான் கிராமாட்டில் உள்ள ஒரு மின்னியல் புகைத்தல் நிலையத்தின் காசாளரை பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. காசாளரான அந்த பெண் ஒரு மின்னியல் புகைத்தல் சாதனத்தை அவரிடம் கொடுத்தார். சந்தேகநபர் காசாளரின் கையைப் அவளது விரல்களில் ஆபாச சேட்டைகள் செய்த போது, அவள் கையை விடுவித்து சந்தேகநபரரை தடுக்க முயன்றாள். இருப்பினும், சந்தேகநபர் சாய்ந்து, அவளது விரல்களை நக்கியும் அந்த பெண்ணின் மீது புகையை ஊதியும் தொந்தரவு செய்தது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here