பிரபல திரைப்படம் போல ஒரு நாள் அதிபரான பின்லாந்து நாட்டின் 16 வயது சிறுமி

16 வயது சிறுமி ஒருவர் ஒரு நாள் அதிபராக இருந்த வினோத சம்பவம் ஒன்று பின்லாந்தில் நிகழ்ந்துள்ளது. ஐரோப்பிய நாடான பின்லாந்தில், வெறும் 16 வயதே ஆகும் சிறுமியான நெல்லா சால்மினென் (Nella Salminen) கடந்த புதன்கிழமை ஒரு நாளைக்கு மட்டும் அதிபராக பதிவி வகித்துள்ளார்.

இது , உலகெங்கிலும் உள்ள இளம்பெண்கள் ஒரு நாள் அரசியல் அல்லது வியாபாரத்தில் தலைமைப் பொறுப்பேற்கும் #GirlsTakeover பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். பின்லாந்தின் அதிபர் Sauli Niinistö-உடன் இணைந்து பணியாற்ற, தொண்டு நிறுவனமான பிளான் இன்டர்நேஷனலால் (Plan International) நெல்லா சால்மினென் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இது குறித்து கூறிய நெல்லா சால்மினென் (Nella Salminen) “இந்த நாள் முழுவதும் நான் நீண்ட காலமாக அனுபவித்த சிறந்த விஷயம் போல் உள்ளதாக தலைநகர் ஹெல்சின்கியில் அதிபர் மாளிகைக்கு வெளியே இருந்தபடி கூறினார்.

இதேவேளை , பின்லாந்தின் பிரதம மந்திரி சன்னா மரின் (Sanna Marin) 2019-ஆம் ஆண்டு தனது 34 வயதில் ஆட்சியைப் பிடித்தபோது, ​​உலகின் மிக இளையவர் என்ற பெருமையை அவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here