SUKE திட்டத்தின் கட்டுமானத்தளத்தில் நடந்த விபத்தில், பாதுகாப்பு விதிமுறையை மீறியதாக ஒப்பந்ததாரர்களுக்கு 300,000 வெள்ளி அபராதம்

கோலாலம்பூர்: சுங்கைபீசி -உலு கிள்ளான் எலிவேட்டட் எக்ஸ்பிரஸ்வே (SUKE) திட்டத்தின் கீழ் வேலை செய்துவரும் இரண்டு ஒப்பந்ததாரர்களுக்கு மார்ச் 22 அன்று தள பாதுகாப்பை உறுதி செய்ய தவறியதற்காக மொத்தம் 300,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முஹிபா பெர்னியாகான் டான் பெம்பினான் சென்டிரியான் பெர்ஹாட்டிற்கு 100,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது, அதே நேரத்தில் துணை ஒப்பந்தக்காரரான சீன கம்யூனிகேஷன்ஸ் கன்ட்ரெக்‌ஷன்ஸ் கம்பனி (M) சென்டிரியான் பெர்ஹாட்டிற்கு 200,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

செப்டம்பர் 20 அன்று கட்டட வாரியத்தால் நடத்தப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள், கட்டுமானத்தின் போது அல்லது அதற்குப் பிறகு கட்டிடங்கள் மற்றும் கட்டுமானப் பணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான விதிமுறையை இரு ஒப்பந்தக்காரர்களும் மீறியதாக கட்டுமான தொழில் மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் 22 அன்று, செராசில் உள்ள பென்சியரான் ஆலம் டாமாய், புஞ்சக் பான்யான் அருகே உள்ள நெடுஞ்சாலை கட்டுமானத் தளத்தில் கேன்ட்ரி கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று வெளிநாட்டு தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலியானார்கள் மற்றும் ஒரு மோட்டார் வண்டி ஓட்டுநர் படுகாயம் அடைந்த விபத்துக்கே இவ் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், செப்டம்பர் 19 அன்று கான்கிரீட் ஸ்லாப் நெடுஞ்சாலையில் விழுந்து, சாலையில் சென்ற வாகனத்தை நசுக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பரில், SUKE திட்டத்தின் CA2 தொகுப்பின் முக்கிய ஒப்பந்ததாரர் மற்றும் துணை ஒப்பந்ததாரர் முறையே 80,000 வெள்ளி மற்றும் 100,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here