நாட்டில் 21 மில்லியனுக்கும் அதிகமான பெரியவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

கோலாலம்பூர்: மொத்தம் 21,073,482 தனிநபர்கள் அல்லது 90 விழுக்காடு பெரியவர்கள் தங்கள் கோவிட் -19 தடுப்பூசியை முடித்துவிட்டதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

கோவிட்நவ் (CovidNow) போர்ட்டலில் உள்ள தரவுகளின் அடிப்படையில், நாட்டில் உள்ள 94.8 விழுக்காட்டினர் அல்லது 22,185,520 பெரியவர்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

மேலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி மொத்தம் 231,174 பேர் அல்லது 7.4 விழுக்காடு இளம் பருவத்தினர் 12 முதல் 19 வயது வரையுள்ளவர்கள் முழுமையான தடுப்பூசிகளை முடித்துள்ளனர்.

அத்தோடு 72.2 விழுக்காடு அல்லது 2,271,858 இளம் பருவத்தினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என்பதையும் தரவு காட்டுகிறது.

ஞாயிற்றுக்கிழமை (அக்.10) மொத்தமாக 129,518 டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டது, அதில் முதல் டோஸாக 31,932 தடுப்பூசிகளும் இரண்டாவது டோஸாக 97,586 தடுப்பூசிகளும் பயன்படுத்தப்பட்டன.

இது தேசிய கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் மொத்த தடுப்பூசி அளவுகளின் எண்ணிக்கையை 45,650,714 ஆகக் கொண்டுவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here