குவந்தான்: பகாங்கில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் கோவிட் -19 க்கு எதிராக இன்னும் முழுமையாக தடுப்பூசி போடவில்லை, இந்த மாத இறுதிக்குள் தேவையான அனைத்து நடைமுறைகளை முடிக்க வேண்டும்.
மாநில கல்வித்துறை இயக்குநர் முஹமட் ரோஸ்லி அப்துல் ரஹ்மான் இது பற்றி கூறுகையில், பகாங்கில் உள்ள 25,000 ஆசிரியர்களில் மொத்தமாக 301 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு இன்னும் தடுப்பூசி போடவில்லை என்றும், நவம்பர் 1 ஆம் தேதிவரையும் அவர்களுக்கு இன்னும் நேரம் இருக்கிறது என்றும் கூறினார்.
“அவர்களில் சிலர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ்க்காக காத்திருக்கிறார்கள். எனவே, தடுப்பூசி போடாதவர்களின் பட்டியலை எங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை. கல்வி அமைச்சால் நிர்ணயிக்கப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்ய அவர்களுக்கு தமது துறை அவர்களுக்கு நேரம் அளிக்கிறது.
“பொதுச் சேவைத் துறை (PSD) அனைத்து அரசு ஊழியர்களுக்கும் தடுப்பூசிகளை நவம்பர் 1 ஆம் தேதிக்குள் முடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
காலக்கெடுவுக்குப் பிறகு, ஒழுங்கு உட்பட அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து PSD யின் அறிவுறுத்தல்களுக்காகக் காத்திருப்போம்” என்று, இன்று பகாங் போலீஸ் தலைமையகத்தில் நடந்த கல்வி அமைச்சுக்கும் போலீஸிற்க்கும் இடையில் நடந்த கூட்டத்தின் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
இதற்கிடையில், கோவிட் -19 தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் பகாங்கில் 12 முதல் 17 வயது வரையிலான இளம் பருவத்தினருக்கான தடுப்பூசி விகிதம் 85 விழுக்காட்டை எட்டியுள்ளதாக ரோஸ்லி கூறினார்.
“இதுவரை, 12 வயது மாணவர்களில் 80 விழுக்காட்டினர் கோவிட் -19 தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றுள்ளனர்; 13 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் 84 விழுக்காட்டினரும் 16 முதல் 17 வயது வரையானவர்கள் 86 விழுக்காடினரும் தமது முதல் டோஸை செலுத்தியுள்ளனர்” என்றார்.
“பள்ளிகள் உட்பட மாநிலம் முழுவதும் தடுப்பூசி திட்டங்கள் மாணவர்கள், அவர்களின் பெற்றோர் மற்றும் பள்ளிகளிடமிருந்து வலுவான ஆதரவைப் பெற்றுள்ளன. இன்றுவரை, திட்டமிட்டபடி எல்லாம் சீராக முன்னேறி வருகிறது,” என்றும் அவர் கூறினார்.
கடந்த அக்.5 ஆம் தேதி துணை கல்வி அமைச்சர் I டத்தோ டாக்டர் மா ஹாங் சூன் இது பற்றி கூறியபோது, நவம்பர் 1 ஆம் தேதிக்கு முன்னர் தங்களுக்கான தடுப்பூசியை போட்டுக்கொள்ளாத ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.