தண்டவாளத்தில் படுத்திருந்த அகதிகள் மீது ரயில் ஏறியதில் மூவர் உடல் நசுங்கி பலி

பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஸ் நகரில் தண்டவாளத்தில் படுத்திருந்த அகதிகள் மீது ரயில் ஏறியதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; ஒருவர் படுகாயம் அடைந்தார்.

ஐரோப்பிய நாடான பிரான்ஸ் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை நகர் பியாரிட்ஸ். இது பிரான்ஸ் க்கு வரும் அகதிகளுக்கான பிரதான வழித்தடமாக உள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து வரும் அகதிகள், இந்த நகரில் இருந்து தான் பிரான்ஸ் நாட்டின் பிற இடங்களுக்கு செல்கின்றனர்.

பியாரிட்ஸ் நகருக்கு வந்த அகதிகள் சிலர், கடந்த திங்கட்கிழமை (அக்.11) இரவு அங்குள்ள ரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கியதாக கூறப்படுகிறது. உள்ளூர் நேரப்படி மறுநாள்  அதிகாலை 6:00 மணிக்கு இந்த தண்டவாளத்தில் வந்த ரயில் அவர்கள் மீது ஏறியது.

இந்த கோர சம்பவத்தில் அகதிகள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் ஒருவருக்கு கால் உடைந்தது. இறந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here