67 PPR அடுக்குமாடி குடியிருப்புகளின் மின்தூக்கிகளை (lifts) பழுதுபார்க்க 127 மில்லியன் வெள்ளி நிதி ஒதுக்கீடு

கோலாலம்பூர்: இங்குள்ள  மக்கள் குடியிருப்பு திட்டத்தின் (PPR) அடுக்குமாடி குடியிருப்புகளில் மிந்தூக்கிகளை (lifts) பழுது பார்த்தல் மற்றும் மாற்றுவதற்கு அரசாங்கம் 127 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் மின்தூக்கிகளில் சாதாரண பழுதுபார்க்கும் பணிகள் முடிவடையும் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

“கோலாலம்பூரில் உள்ள 67 PPR அடுக்குமாடி குடியிருப்புகளில் பழைய மின்தூக்கிகளை மாற்றுவதற்கு ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் ஆகும்” என்று இன்று செந்தூலில் உள்ள ஶ்ரீ பேராக் PPR குடியிருப்புகளைப் பார்வையிட்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

17 மாடி குடியிருப்புகள் கொண்ட இந்த ஏழு தொகுதிகள் 1986 இல் கட்டப்பட்டது மற்றும் இங்கு 7,140 குடியிருப்பாளர்கள் உள்ளனர்.

குறிப்பாக தண்ணீர் வழங்கல் இடையூறு அல்லது குடியிருப்பாளர்களிடையே மரணம் போன்ற அவசர காலங்களில், செயல்படாத மின்தூக்கிகளால் குடியிருப்பாளர்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.

குறிப்பாக உயரமான தளங்களில் வசிப்பவர்களுக்கு இறந்தவரின் உடலை கீழே கொண்டு வருவது மிகவும் கடினம் என்றும் அவர் கூறினார்.

PPR குடியிருப்புகளில் வகன தர்ப்பிடங்கள் இல்லாதது பற்றி அவருடன் கேட்டதற்கு, கோலாலம்பூர் மாநகர மண்டபம் (DBKL) இந்த விஷயத்தைப் சரி பார்க்கும் என்றார். இதற்கு பல நிலைகள் கொண்ட வாகன தரிப்பிட வசதிகள் உருவாக்குபது இதற்கான தீர்வுகளில் ஒன்று என்றும் பிரதமர் கூறினார்.

மேலும் ஶ்ரீ பேராக் PPR க்காக கூட்டரசு பிரதேச அமைச்சகம் மற்றும் DBKL 8.4 மில்லியன் வெள்ளியை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஏழு தொகுதிகளில் உள்ள 14 யூனிட் மின்தூக்கிகளை மாற்றுவதற்கும்,மின் வயரிங் பழுதுபார்ப்பதற்கும் 1.8 மில்லியன் வெள்ளியும் ,400,000 வெள்ளி செலவில் சமூக மண்டபத்தை மேம்படுத்தவும் இந்த பணம் பயன்படுத்தப்படும்.

ஏழு தொகுதிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள கால்பந்து மைதானம் மற்றும் பிற வசதிகளை மேம்படுத்த மற்றொரு 1 மில்லியன் வெள்ளியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

இன்று கூட்டரசு பிரதேச அமைச்சர் ஷாஹிடன் காசிமுடன் ஶ்ரீ பேராக் பிபிஆர் குடியிருப்புகளுக்கு தனது பணி வருகை மேற்கொண்டிருந்த பிரதமர், குடியிருப்பாளர்கள் தங்கள் வாழ்க்கை நிலைமைகள் குறித்து எழுந்த புகார்களைக் கேட்டதாக கூறினார். முக்கிய புகாராக மின்தூக்கிகள் மிக மோசமான நிலையில் இருப்பதாக அவர்கள் கூறியதாக அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here