750 ML தண்ணீர் பாட்டிலின் விலை 250,000 வெள்ளியா?

உலகின் மிக விலையுயர்ந்த தண்ணீர் பாட்டில் , அக்வா டி கிறிஸ்டல்லோ (ACQUA DI CRISTALLO). இது 750ML தண்ணீர் பாட்டில்  250,000 வெள்ளிக்கு ($60,000) விற்கப்படுகிறது.

இந்த தண்ணீர் போத்தல் காலஞ்சென்ற, இத்தாலி நாட்டின் வடிவமைப்பாளரான Amedeo Clemente Modigliani என்பவரால் வடிவமைக்கப்பட்டது.

பிரான்ஸ் மற்றும் பிஜி ஆகிய நாடுகளில் எடுக்கப்பட்ட தண்ணீரானது பெர்னாண்டோ அல்டமிரனோ வடிவமைப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. 24 காரட் தங்கத்தால் ஆன பாட்டிலில் இந்த தண்ணீர் அடைக்கப்பட்டுள்ளது.

அக்வா டி கிறிஸ்டல்லோ ட்ரிபுடோ எ மோடிக்லியானியின் ஒவ்வொரு பாட்டிலிலும் 5mg 23k தங்கத்துடன் தெளிக்கப்படுகிறது.இந்த தண்ணீர் பாட்டிலின் வடிவமைப்பு மற்றும் பொதியிடலில் சில வித்தியாசமான பாணிகள் இருந்தாலும், மிகவும் விலையுயர்ந்த பாட்டில் 750 மிலி 24k திட தங்கத்தில் வருகிறது. அந்த சிறிய உலோகத்தை தெளிப்பது உண்மையில் நீரின் காரத்தன்மையை அதிகரிக்கிறது மற்றும் சிலர் இந்த கார நீர் குடிப்பதற்கு சிறந்தது என்று நம்புகிறார்கள்.

அக்வா டி கிறிஸ்டல்லோ ட்ரிபுடோ மோடிக்லியானியின் இது தவிர்ந்த வேறு தண்ணீர் பாட்டில்ககளும் உள்ளன. அவற்றில் ஐஸ் ப்ளூ பாட்டில் போன்ற மலிவு விலையில் உள்ளன. அவை 1,180 வெள்ளிக்கு ($285) மட்டுமே விற்கப்படுகிறது.

தங்கம் தவிர மற்ற வடிவமைப்புகளில் தங்க மேட், வெள்ளி, வெள்ளி மேட் மற்றும் படிக வவை ஆகியனவும் அடங்கும். மேலும் அவை அனைத்தும் பிரான்ஸ், பிஜி மற்றும் ஐஸ்லாந்தில் இருந்து வரும் ஒரே நீர் கலவையைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here