காஜாங்-சிரம்பான் (LEKAS) நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் பலி

நீலாய், அக்டோபர் 18:

நேற்று இரவு இங்குள்ள காஜாங்-சிரம்பான் (LEKAS) நெடுஞ்சாலையில், மோட்டார் வண்டி கட்டுப்பாட்டை இழந்து, சாலைத்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில், 27 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

முஹமட் லுக்மானுல் ஹக்கீம் அப்துல் ஹாதி என்ற ஆடவரே சிரம்பானிலிருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்றபோது நெடுஞ்சாலையின் 29.8 ஆவது கிலோமீட்டரில் உள்ள உலோகத்திலான சாலைத்தடுப்பில் மோதியதாக நீலாய் மாவட்ட காவல்துறைத் தலைவர் முஹமட் ஃபாஸ்லி அப்துல் ரஹ்மான் கூறினார்.

சம்பவத்தின்போது, அதே திசையில் பயணித்த இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் முஹமட் லுக்மானுலைத் தாக்காமல் இருக்க முயன்றனர், ஆனால் இரவு 9.30 மணியளவில் அவர்களும் விபத்தில் சறுக்கி விழுந்தனர்.

பாதிக்கப்பட்டவரான முஹமட் லுக்மானுலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது, அதன்காரணமாக சம்பவ இடத்திலேயே அவர் இறந்து விட்டதாக அறிவித்தார்.

மற்ற இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களான முஹமட் டட் டெர்மிஸி யூசோஃப், (26), மற்றும் முஹமட் ஃபாரிஸ் அஹமட் பவுஸி, (27), முகம் மற்றும் கை ஆகியவற்றில் பலத்த காயமடைந்தனர். மேலும் அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக சிரம்பானில் உள்ள துவாங்கு ஜபார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

 

 

-பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here