தாய்லாந்து தனிமைப்படுத்தலுக்கு விலக்கு அளிக்க இருக்கும் நாட்டோடு மலேசியாவை இணைக்க பேச்சு நடத்தப்படும்

பேங்காக்: தாய்லாந்திற்குள் நுழையும் போது 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தலை முழுமையாக தடுப்பூசி போட்ட பார்வையாளர்கள் தவிர்க்கும் குறைந்த ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலில் மலேசியாவை சேர்க்க விவாதங்கள் நடத்தப்படும்.

மலேசிய தூதர் ஜோஜி சாமுவேல், தாய்லாந்தில் கோவிட் -19 நிலைமை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில், நவம்பர் 1 ஆம் தேதி முதல் விமானத்தில் பயணம் செய்யும் குறைந்த ஆபத்துள்ள நாடுகளைச் சேர்ந்த முழுமையான தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு தனிமைப்படுத்தல் இருக்காது என்று தெரிவித்திருந்தது. இருப்பினும், மலேசியா அப்பட்டியலில் சேர்க்கப்படவில்லை.

அதிக தடுப்பூசி விகிதம் காரணமாக மலேசியாவின் தொற்று விகிதம் குறைந்துள்ளது. இன்றுவரை, மலேசியாவில் வயது வந்தோரில் 90% க்கும் அதிகமானோர் தங்கள் கோவிட் -19 தடுப்பூசியை முடித்துள்ளனர்.

எனவே, மலேசியாவை எப்படி பட்டியலில் சேர்க்க முடியும் என்பதை நாங்கள் பார்க்கப் போகிறோம்  என்று அவர்  கூறினார்.

கடந்த வாரம் தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ-சா  10 குறைந்த ஆபத்துள்ள நாடுகளிலிருந்து விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு நவம்பர் 1 முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்தார். அதில் பிரிட்டன், ஜெர்மனி, சிங்கப்பூர், சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் அடங்கும்.

இன்றுவரை, தாய்லாந்தின் கோவிட் -19 நிர்வாக மையம் பட்டியலை இறுதி செய்யவில்லை. ஆனால் உள்ளூர் ஊடகங்கள் 10 க்கும் மேற்பட்ட நாடுகள் பட்டியலில் சேர்க்கப்படும் என்று தெரிவித்தன.

தேசிய மீட்பு கவுன்சில் (எம்பிஎன்) தலைவர் முஹிடின் யாசின், குறிப்பிட்ட நாடுகளிலிருந்து முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட வெளிநாட்டவர்களை கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாமல் மலேசியாவுக்குள் நுழைய அனுமதிப்பதன் மூலம் நாட்டின் எல்லையை பாதுகாப்பாக திறக்க அரசு பரிசீலித்து வருவதாக கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here