சந்தேக நபர்களின் தடுப்புக்காவல் உடை தொடர்பில் தெளிவுபடுத்துங்கள் என்கிறார் கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம்

பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 16 :

குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும்போது தடுப்புகாவல் உடைகளை அணியச் செய்யப்படுவார்களா அல்லது வேறு வழியின்றி அதனை அணிவார்களா என்பது தொடர்பில் அதன் நடைமுறைகளை தெளிவுபடுத்துமாறு கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும் காவல்துறையும் இந்த விதிமுறைகளை தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதால், குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் ஒரே மாதிரியாக நடத்தப்படுவது அவசியம் என்று அவர் கூறினார்.

“மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சந்தேக நபர்களுக்கு பிரகாசமான ஆரஞ்சு நிற தடுப்பு டி-ஷர்ட்களை அணியவேண்டும் என்பது கட்டாயமா? இல்லை அதற்கு ஏதும் தரநிலைகள் உள்ளதா என்பது தொடர்பில் விளக்கம் வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

“இது ஊழல் ஒழிப்பாளர்களின் பார்வையில் இது ஒருவித ஆதரவை அல்லது தேர்ந்தெடுக்கும் தன்மையை ஊக்குவிக்கிறது. இது அதன் சொந்தக் கொள்கையை செயல்படுத்துவதில் அதன் மெத்தனப் போக்கை பிரதிபலிக்கிறது.

“எம்ஏசிசிக்கு எந்தக் கொள்கையும் இல்லை, அல்லது அதன் கொள்கைகள் தனிப்பட்ட அதிகாரிகளின் விருப்பப்படி இருக்குமா ” என்று லிம் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

கடந்த வாரம், செனட் தலைவர் டான்ஸ்ரீ ரைஸ் யாதிம் தலைமையிலான ஊழல் மீதான நாடாளுமன்ற சிறப்புக் குழு, MACC கைதிகள் மீது “இரட்டைத் தரநிலைகள்” விதிக்கப்படக்கூடாது என்று கூறியது.

சந்தேக நபர்கள் ஆரஞ்சு நிற உடையை அவர்களின் சமூக அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் அணிய வேண்டும் என்று ரைஸ் கூறியதுடன், சில சந்தேக நபர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here