ஆயர் ஈத்தாம் தீ விபத்தில் இரண்டு கடைவீடுகள் மற்றும் இரண்டு கார்கள் சேதம்

ஜார்ஜ் டவுனில் திங்கள்கிழமை (அக்டோபர் 18) நண்பகல் வேளையில் தீப்பிடித்ததில்  ஆயர் ஈத்தாமில் உள்ள இரண்டு பழைய கடைவீடுகள் கடுமையாக சேதமடைந்தன. மேலும் அருகில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களும் தீயில் எரிந்து சேதமடைந்தன.

பிற்பகல் 12.32 மணியளவில் ஜாலான் ஆயர் ஈத்தாமில் ஏற்பட்ட தீ பற்றி எங்களுக்கு அழைப்பு வந்தது என்று தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

பயா தெருபாங் மற்றும் ஜாலான் பேராக் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் மற்றும் அருகிலுள்ள கிளைகளில் இருந்து தன்னார்வ தீயணைப்பு வீரர்கள் உதவி செய்தனர். இரண்டு கடை அலகுகள் தீயில் 80% அழிக்கப்பட்டன. இரண்டு கார்களும் தீயில்  எரிந்தன. எனினும், உயிர் சேதம் எதுவும் பதிவாகவில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here