ஜிருட்டை பின்னுக்கு தள்ளிய எம்பாப்பே

பாரிஸ்,

பிரான்ஸ் அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையை கிலியன் எம்பாப்பே பெற்றுள்ளார். பிரான்ஸ் கால்பந்து அணியின் கேப்டன் கிலியன் எம்பாப்பே, செனகலுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இரட்டை கோல் அடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். செனகலுக்கு எதிரான ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்ததன் மூலம், சர்வதேச கால்பந்தில் எம்பாப்பேவின் மொத்த கோல் எண்ணிக்கை 58-ஆக உயர்ந்தது.

அவர் இதுவரை 99 போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை எட்டியுள்ளார். இதன் மூலம், பிரான்ஸ் அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையை கிலியன் எம்பாப்பே பெற்றுள்ளார். இதற்கு முன்பு ஒலிவியர் ஜிருட் 137 போட்டிகளில் 57 கோல்கள் அடித்து முதலிடத்தில் இருந்தார். தற்போது அவரை பின்னுக்கு தள்ளி எம்பாப்பே புதிய சாதனையை படைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here