பெயர் மாறுகிறதா ‘Facebook’ ?

பிரபல சமூக வலைத்தளமான Facebook (FB.0) தனது பெயரை மாற்ற உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும், முகநூல் எனப்படும் Facebook நிறுவனத்தின் பேஸ்புக் செயலியை, உலகம் முழுவதும் கோடிக் கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்நிறுவனம், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட நிறுவனங்களையும் தன்வசப்படுத்தியது.

Facebook நிறுவனம் புதிய பெயரில் ரீ-பிராண்டிங் செய்யப்படும் எனவும், ஒற்றை தாய் நிறுவனத்தின் கீழ் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், ஓகுலஸ் உள்ளிட்டவை அதன் கிளை நிறுவனங்களாக மாறும் என்றும் கூறப்படுகிறது.

Facebook நிறுவனத்தின் வருடாந்திர மாநாடு வரும் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் Facebook பெயர் மாற்றம் குறித்த அறிவிப்பை தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தி வெர்ஜ் என்ற இதழ் செய்தி வெளியிட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here