ஒரு வாரத்தில் 261 பேருக்கு கோவிட் -19 மாறுபாடுடைய வைரஸ் தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டன

கோலாலம்பூர், அக்டோபர் 28 :

நாடு முழுவதும், அக்டோபர் 20 மற்றும் அக்டோபர் 28 க்கு இடையில் 261 புதிய Covid-19 மாறுபாடுகள் (VOC) அடையாளம் காணப்பட்டன.

இவற்றில் 259 தொற்றுக்கள் டெல்தா மாறுபாடு (பி.1.617.2) கொண்டவையும் மீதமுள்ள இரண்டு பேத்தா மாறுபாடு (B.1.351) கொண்டவையும் இனங்காணப்பட்டதாக சுகாதார இயக்குனர்-ஜெனரல் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷம் அப்துல்லா இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இனங்காணப்படட 259 டெல்டா தொற்றுக்களில், சிலாங்கூரில் 72 நோய்த்தொற்றுகள் கண்டறியப்படடன, பினாங்கு (33) , கெடா (29), பேராக் (26), கிளந்தான் (23), திரெங்கானு (19), சபா (18), ஜோகூர் (15), பகாங் (11) கோலாலம்பூர் (6), பெர்லிஸ் மற்றும் லாபுவான் (3) மற்றும் புத்ரா ஜெயா (1) என்ற எண்ணிக்கையில் பதிவு செய்தன .

மேலும் இரு பேத்தா தொற்றுக்களும் சிலாங்கூர் மற்றும் கிளந்தானில் ஒவ்வொன்றும் பதிவாகின என்றார்.

இதுவரை நாட்டில் மொத்தம் 2,645 மாறுபாடுடைய கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கள் கண்டறியப்பட்டன என்று டாக்டர் நூர் ஹிஷம் அப்துல்லா தெரிவித்தார்.

மொத்தம் 2,625 என்ற கணக்கில் 2,385 டெல்தா தொற்றுக்கள், 226 பேத்தா தொற்றுக்கள் மற்றும் 14 ஆல்பா தொற்றுக்கள் மற்றும் 20 VAPA தொற்றுக்கள் – 13 THETA மாறுபாடு, நான்கு Kappa மாறுபாடு மற்றும் மூன்று Eta மாறுபாடு, ” என்று அந்த அறிக்கையில் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here