பசியாற 10 வெள்ளி கேட்ட தந்தைக்கு, கடுமையான காயம் விளைவித்ததாக மகன் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், அக்டோபர் 28 :

கிளந்தானில் உள்ள கோத்தா பாரு மாவட்ட நீதிமன்றத்தில் தந்தைக்கு கடுமையான காயம் விளைவித்ததாக மகன் ஒருவர் குற்றம் சாட்டப்பட்டார். பாச்சோக், கம்போங் டுசுன் டுரியானில் உள்ள அவர்களது வீட்டில் வைத்து, மகனிடம் 10 வெள்ளி கேட்டபோது அவர் மகனால் கடுமையாக தாக்கப்பட்டார்.

குற்றஞ்சாட்டப்பட்டவரான மாட் கெய்ரி முஹமட், 34, என்பவருக்கு எதிரான குற்றச்சாட்டு நீதிபதி அஹமட் பாஸலி பஹ்ருடின் முன்னால் படித்துக்காட்டப்பட்ட பொழுது, அவர் தான் குற்றவாளி அல்ல என்று மறுப்புத் தெரிவித்தார்.

குற்றச்சாட்டின்படி, கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி காலை 10 மணியளவில், குற்றஞ்சாட்டப்பட்ட மாட் கெய்ரி வேண்டுமென்றே அவரது தந்தையான பாதிக்கப்பட்டவரை தீவிரமாக தாக்கியதால் அவர் காயமடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டது .

62 வயதான குற்றஞ்சாட்டப்பட்டவரின் தந்தை, தனது காலை உணவை வாங்குவதற்கு 10 வெள்ளியை மகனிடம் கேட்டபோது, அவர் மகன் அவரை தாக்கியதில் பாதிக்கப்பட்டவரது வலது கை மணிக்கட்டு உடைந்ததுடன் தலையில் பெரிய காயம் ஏற்பட்டு அதற்கு சிகிச்சையாக ஒன்பது தையல்களையும் பெற்றார்.

குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிராக குற்றவியல் சட்டம் 325 இந்த கீழ் குற்றம் சாட்டப்பட்டது. அதே நேரம் அதே சட்டத்தின் 326A இன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 14 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதிக்க இது வழி செய்கிறது.

ஒரு கோஸ்மோ அறிக்கையின்படி, அரசு துணை வழக்கறிஞர் அபு ஆர்சல்னா ஜெய்னல் அபிடின் இவ்வழக்கில் ஆஜரானார். ஆனால் குற்றஞ்சாட்டப்பட்டவர் தரப்பை பிரதிநிதித்துவம் செய்து யாரும் ஆஜராகவில்லை.

பாதிக்கப்பட்டவர் குற்றஞ்சாட்டப்பட்டவரது குடும்ப உறுப்பினர் என்பதால், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here