வங்சா மாஜூவில் நவ. 1ஆம் தேதி முதல் மின்சார பேருந்து முன்னோடித் திட்டம் ஆரம்பம்

கோலாலம்பூர், அக்டோபர் 28 :

2030 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் தலைநகரில் கார்பன் குறைப்பை ஊக்கிவிக்கும் நோக்கில் GoKL இலவச பேருந்து சேவையானது மின்கல மின்சார வாகனங்களை  (BEVs) சேவையில் ஈடுபடுத்தவுள்ளது.

கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஷாஹிதான் காசிம் கூறுகையில், கோலாலம்பூர் முதல் பூஜ்ஜிய-கார்பன் நகரம் என்ற முன்னோடித் திட்டத்தின் முயற்சியில் வங்சா மாஜூவில் இந்த மின்சார பேருந்து திட்டம் நவ. 1ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்றார்.

“BEV சேவையானது நகரத்தைச் சுற்றியுள்ள இடங்களிலும் படிப்படியாக செயல்படுத்தப்படும். மேலும் இந்த மின்சாரப் பேருந்து முற்றிலும் அழகிய பச்சை நிறத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறை தொடர்பான கருத்தை வெளிப்படுத்துவதாக வர்ணம் பூசப்பட்டுள்ளது,” என்று இன்று GoKL இலவச மின்சார பேருந்து சேவையை தொடக்கி வைத்த பின்னர் நிருபர்களிடம் கூறினார்.

மேலும் 2023 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அனைத்து GoKL இலவச பேருந்து சேவைகளிலும் BEV இனை முழுமையாக பயன்படுத்த DBKL இலக்கு கொண்டுள்ளது என்றார்.

“மின்சார பேருந்து சேவைகளின் எண்ணிக்கை அவ்வப்போது திட்டமிடப்பட்ட அடிப்படையில் அதிகரிக்கும் என்றும் ஒரு மின்சார பேருந்து ஒரு தடவை மின்னேற்றப்பட்டால் (பேட்டரிகள்) 250 கிலோமீட்டர் (கிமீ) வரை அதனால் பயணம் செய்ய முடியும்,” என்றும் அவர் கூறினார்.

GoKL இலவச பேருந்து சேவை நவம்பர் 1 ஆம் தேதியிலிருந்து இரூ புதிய பாதைகளை அறிமுகப்படுத்தியுள்ளது, அதாவது Hijau Serindit route (கிளிப்பச்சை நிறக் கோடு) மற்றும் Kelabu route (சாம்பல் நிறக் கோடு).

“அதாவது 13.8km தூரமான Serindit Green Line ஆனது Maluri MRT Transit Hub இருந்து ஆரம்பித்து Bandar Bandar Sri Permaisuri இல் நிறைவடைகிறது. 16.7km தூரமான Kelabu route ஆனது Cochrane MRT terminal இருந்து தொடங்கி Bandar Tun Razak இல் முடிவடைகிறது.

“பஸ்ஸில் இருந்தோ மற்றும் ரயில் நிலையத்திலிருந்தோ தங்கள் போக்குவரத்து முறைகளை மாற்றுவதற்காக பயணிகளுக்கு அதிக தேர்வுகள் கொடுக்க இந்த இரண்டு புதிய வழிகளும் உருவாக்கப்பட்டுள்ளன” என்று அவர் கூறினார்.

– பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here