மலையாள நடிகை அனிகா விக்ரமன் கே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அனிகா தமிழ் மற்றும் மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார். அனிகா ‘எங்க பாட்டன் பார்த்தியா.’ விஷமக்காரன் என்ற படங்களில் நடித்து வருகிறார். நடிகை அனிகா விக்ரமன், தனது முன்னாள் காதலன் தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டி உள்ளார். இது குறித்து அனிகா விக்ரமன் கூறி இருப்பதாவது;-
தனது முன்னாள் காதலர் அனூப் பிள்ளை தன்னை அடித்ததாக அனிகா விக்ரமன் குற்றம் சாட்டியுள்ளார். காவல்துறையில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் அனிகா பகிர்ந்துள்ள குறிப்பு கூறுகிறது. பல ஆண்டுகளாக அனூப் பிள்ளை மனதளவிலும், உடலளவிலும் என்ன்னை துன்புறுத்து வந்தார். அவர் என்னை இரண்டாவது முறையாக துன்புறுத்தியபோது, பெங்களூரு போலீசில் புகார் அளித்தேன். முதலில் சென்னையில் வைத்து என்னை அடித்தார்.
அன்று அவர் அழுது புலம்பி கெஞ்சி கேட்டதால் நான் புகார் அளிக்கவில்லை. நான் முட்டாளாக இருந்தேன். இரண்டாவது முறையாக அவர் என்னை அடித்த போது நான் புகார் அளித்தேன், ஆனால் அவர் போலீசாரிடம் பணம் கொடுத்து என்னை சிக்க வைத்தார். போலீசார் தன்னுடன் இருப்பதாக நினைத்து அவர் தொடர்ந்து என்னை அடித்து துன்புறுத்தினார். நான் படப்பிடிப்பிற்கு செல்வதை தடுக்க எனது செல்போனை தூக்கி எறியும் அளவிற்கு சென்றார்.
ஐதராபாத் செல்வதற்கு முன், எனது போனை ஆப் செய்து விட்டு என்னை தாக்கினார். வாய் மற்றும் மூக்கில் தாக்கினார். காயம்பட்ட முகத்துடன் எப்படி நடிப்பாய் என்று பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி அடித்தார். நான் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் குணமடைய பல நாட்கள் ஆனது. அவனுடைய கொடுமையை என்னால் மன்னிக்க முடியாது. தற்போது நியூயார்க்கில் தலைமறைவாக உள்ளார். இதையெல்லாம் வெளிப்படையாக எழுதுகிறேன் என கூறி உள்ளார்.





















