மலேசியாவில் உள்நாட்டு முதலீட்டின் ஆணிவேராக மைடா (MIDA) விளங்கி வருகிறது. மலேசிய அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சின் (மிட்டி MITI) கீழ் செயல்படும் ஓர் அரசு நிறுவனமான மைடா, அரசாங்கத்தின் முதன்மை முதலீட்டு மேம்பாடு மற்றும் தொழிலியல் மேம்பாடு அமைப்பாகத் திகழ்கிறது.
கடந்த 50 ஆண்டுகளாக மலேசியாவின் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் துரித வளர்ச்சிக்கு அளப்பரிய பங்கினை அது ஆற்றி வருகிறது. கிட்டத்தட்ட நாட்டின் பொருளாதார முதுகெலும்பாகவே மைடா விளங்குகிறது.
நாட்டின் நிலையான பொருளாதார வளர்ச்சியைப் பலப்படுத்துவதற்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து நிலையான முதலீடுகளைக் கொண்டுவந்து குவிக்கும் தீவிர முயற்சிகளை மைடா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
கோவிட்-19 கொடுந்தொற்றுக் கிருமி பரவல் ஏற்படுத்தியிருக்கும் மோசாமான விளைவுகளில் இருந்து நாட்டின் பொருளாதாரத்தைத் தொடர்ந்து வலிமையாக வைத்திருக்கும் முயற்சிகளில் மைடா உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறது.
தொழில்கள் தற்காலிக முடக்கம் கண்டாலும் நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் பொருளாதாரம் – நிதி நிலை சரிந்துவிடாமல் இருப்பதை உறுதிசெய்வதிலும் மைடாவின் முதலீட்டு வியூகங்கள் ஆக்கப்பூர்வப் பலன்களைத் தந்து வருகின்றன.
தொழில் துறைகள் முழு அளவில் செயல்படு வதற்குரிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வேலை இழப்புகள், தொழிலாளர் பாதிப்புகள் என்ற இக்கட்டான மற்றும் சவால்களுக்கும் தீர்வு பிறந்துள்ளது. இக்காலகட்டத்தில் உள்நாட்டு – வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதிலும் மைடா இன்றளவும் அதீத வெற்றிகளைப் பதிவு ஙெ்ய்துள்ளது.
பல்வேறு பொருளாதார உதவித் திட்டங்கள் வழி தொழில்துறைகளுக்குப் புத்துயிர் அளிப்பதிலும் மைடா மிகச் சிறந்த பங்கினை ஆற்றிவருகிறது.
புதிய பொருளாதார முன்மாதிரி (NEM), பொருளாதார உருமாற்றுத் திட்டம் (ETP) 5 ஆண்டு மலேசியத் திட்டம் மற்றும் தொழில்துறை பெருந்திட்டம் ஆகியவற்றில் உள்நாட்டு முதலீட்டுப் பங்களிப்பு மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. பொருளாதார உருமாற்றத் திட்டத்தைப் பொறுத்தவரை 70 விழுக்காட்டு உள்நாட்டு முதலீட்டாளர்கள் பங்கேற்புக்கு முன்னுரிமை கொடுப்பதை இலக்காகக் கொண்டிருக்கிறது. உள்நாட்டு வர்த்தகங்களுக்கு உத்வேகத்தைக் கொடுப்பதற்குரிய நடவடிக்கைகள் மற்றும் சலுகைகள் கீழ்க் குறிப்பிட்டவாறு வரையறுக்கப்பட்டிருக்கின்றன:
* தகுதிமிக்க நிறுவனங்களை அடையாளம் கண்டு மலேசியப் பங்காளிகளாக இணைப்பது;
* மலேசியாவில் செயல்படும் எம்என்சி (MNC) எனப்படும் பன்னாட்டு நிறுவனங்கள் மலேசிய நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் வழங்குவதற்கு ஊக்குவிக்கப்படுதல்;
* மலேசிய உரிமை பெற்ற நிறுவனங்களுக்கு ஆதரவு தரக்கூடிய தொழில்நுட்பங்களைப் பெறுவதில் உத்வேகம் காட்டுதல்;
* உள்நாட்டு நிறுவனங்கள் அனைத்துலகத் தரம் – சான்றிதழ் நிபந்தனைகளுக்கு உட்பட்ட சாதனைகளை ஏற்படுத்தும் வகையில் அவற்றைத் தயார்ப்படுத்துதல்.
கடந்த காலங்களில் உள்நாட்டு நேரடி முதலீட்டுத் திட்டத்தின் (DDI) கீழ் நாட்டின் முதலீடுகளில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைத்தன.
எழுச்சிபெறும் உள்நாட்டு முதலீடு
2020ஆம் ஆண்டில் மலேசியா தயாரிப்பு, சேவைகள், மூலத்தொழில் துறைகளில் 167.4 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 4,756 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இவை 114,676 வேலை வாய்ப்புகளை உருவாக்கின. இதில் உள்நாட்டு நேரடி முதலீடு (Domestic Investment-DDI)பெரும்பான்மை பங்கினைக் கொண்டிருந்தது. அதன் மதிப்பு 103.2 பில்லியன் ரிங்கிட் அல்லது 61.6 விழுக்காடு. எஞ்சிய 64.2 பில்லியன் ரிங்கிட் வெளிநாட்டு நேரடி முதலீட்டு Foreign Direct Investment – FDI வருமானம் மூலம் கிட்டியது. தயாரிப்புத் துறையில் உள்நாட்டு நேரடி முதலீடு 2019ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 22.6 விழுக்காடு உயர்வுகண்டு 34.7 பில்லியன் ரிங்கிட் வருமானத்தைப் பதிவுஙெ்ய்தது.
2021, முதல் அரையாண்டில் மலேசியாவில் தயாரிப்பு, சேவைகள், மூலத் தொழில்துறையில் 107.5 பில்லியன் மதிப்பிலான முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன. கடந்தாண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடு கையில் 69.8 விழுக்காடு அதி கரிப்பு ஆகும்.
இதில் மொத்தம் 2,110 திட்டங்கள் சம்பந்தப்பட்டன. இவற்றின் வழி நாட்டில் 44,994 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. உள்நாட்டு நேரடி முதலீட்டின் மதிப்பு 45.0 பில்லியன் ரிங்கிட். இம்மூன்று துறைகளிலும் ஒப்புதல் தரப்பட்ட மொத்த முதலீடுகளில் 41.9 விழுக்காட்டு பங்களிப்பை வழங்கியிருக்கிறது.
உள்நாட்டு முதலீட்டு வியூக நிதி – வளர்ச்சியின் எழுச்சி
உள்நாட்டு முதலீட்டு வியூக நிதி (Domestic Investment Strategic Fund – DISF) 2012 ஜூலையில் அமைக்கப்பட்டது. இந்த நிதியானது மலேசிய உரிமை பெற்ற நிறுவனங்கள் உயர் தொழில்நுட்பம் புத்தாக்க அடிப்படையிலான உற்பத்திகள் மற்றும் நடவடிக்கைகளில் ஆக்கப்பூர்வமான முறையில் முதலீடு செய்வதற்கு ஊக்கமளிக்கும் ஒரு பிரதான மூல ஆதாரமாகும்.
2021, செப்டம்பர் 30 வரை மைடா 19.1 பில்லியன் ரிங்கிட் முதலீட்டு மதிப்பிலான 435 திட்டங்களுக்கு 2.1 பில்லியன் ரிங்கிட் உள்நாட்டு முதலீட்டு வியூக நிதி மானியங்களை அங்கீகரித்திருக்கிறது.
உள்நாட்டு நிறுவனங்கள், உள்நாட்டு மேம்பாட்டு நீரோட்டத்தில் முன்னேற்றகரமான உருமாற்றங்களைக் கொண்டு வருவதற்கு உயர்தரத் திட்டங்களில் ஈடுபடுவதற்கு இந்த மானியம் பெரும் உதவியாக இருக்கிறது. உள்நாட்டு முதலீட்டு வியூக நிதியானது உள்நாட்டு நிறுவனங்கள் தொழில்நுட்பங்களை மாற்றிவிடுவதில் பெரும் உதவி நல்கி வருகிறது.
இதன்வழி ஏற்றுமதி அதிகரித்து உயர் மதிப்பிலான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு புதிய சந்தைகளில் நுழைவதற்குரிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட் டிருக்கின்றன.
இதற்கு முன்னுதாரணமாக உள்நாட்டு நிறுவனங்களான Ceedtec Technology, Nashmir Holdings, TT Vision Technologies, JCY Engineering, Dominant Opto, Technologies and VisDynamics விளங்குகின்றன.
உள்நாட்டு நிறுவனங்கள் உலகளாவிய மதிப்பு சங்கிலித்தொடர் மதிப்பீட்டில் கட்டங்கட்டமாக இணைக்கப்படுகின்றன
நாட்டின் தொழில்துறை மேம்பாட்டு நிர்மாணிப்பில் தயாரிப்பு தொடர்பிலான சேவைத் துறைகள், உள்நாட்டு சிறு மற்றும் நடுத்தர அளவிலான எண்டர்பிரைஸ் – வர்த்தகங்கள் (எஸ்எம்இ- SME ) குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றுகின்றன. இந்தத் தொழில்துறைகள் பெரும் நிறுவனங்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் உத்வேகத்தைத் தந்து நாட்டின் வருமான வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்கினை ஆற்றி வருகின்றன.
மைடா தொடர்ந்து எஸ்எம்இ தொழில் துறைகளை பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனங்கள் ஆகியவற்றுடன் தொழில் தொடர்புகளுக்கு வழிவகுத்து அவற்றின் செயலாக்கத்திற்கு உந்து சக்தியை வழங்கி வருகிறது.
2020இல் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து மொத்தம் 15 நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருக்கிறது. இதில் 5 விநியோக சங்கிலித்தொடர் திட்டங்கள், 7 தொழில் முனைவர் மேம்பாட்டுத் திட்டங்கள், 3 தொழில்துறை ஒளியூட்டல் முன்னெடுப்புத் திட்டங்கள் அடங்கும். மொத்தம் 96 உள்நாட்டு தொழில் முனைவோர் இதில் பங்கேற்றனர். இந்தக் கூட்டு இணைப்பு கிட்டத்தட்ட 2 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான உள்நாட்டு முதலீடுகளைக் கவர்ந்தது. மைடா தொடர்ந்து இதுபோன்ற ஊக்கமளிப்பு மற்றும் கூட்டு இணைப்புத் திட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறது. இதற்கான களங்களாக பல்வேறு சந்திப்பு நிகழ்ச்சிகளை அது நடத்தி வருகிறது.
அதில் காலாண்டுக்கு ஒரு முறை உள்நாட்டு முதலீட்டுக் கருத்தரங்குகள், அரசாங்கத்தின் ஆகக்கடைசியான அனுகூலங்கள், வசதி வாய்ப்புகள் மற்றும் உள்நாட்டு நேரடி முதலீடுகளை விளம்பரப்படுத்தும் திட்டங்களை அது முன்னெடுத்து வருகிறது.
இவ்வாண்டு உள்நாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கும் முயற்சிகளை மைடா தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
உள்நாட்டு முதலீட்டுக் கருத்தரங்குகள், தேசிய வர்த்தகத் தொழில்துறை, ங்பை, சங்கங்களுடன் இணைந்து மேற்கொள்ளும் தொழில்துறை தொடர்பான திட்டங்கள், உள்நாட்டு முதலீட்டு ஒருங்கிணைப்பு களவியூகங்கள் போன்ற துறைகளிலும் மைடா அதீத கவனம் செலுத்தி வருகிறது.
நாடு தற்போது எதிர்நோக்கி இருக்கும் மிகக் கொடுமையான கோவிட்-19 தொற்றுப் பரவல் நெருக்கடி காலத்தில் மெய்நிகர் வழி இவற்றை மைடா நடத்தி வருகிறது.
தன்னுடைய சங்கிலித் தொடர் முயற்சிகள் எவ்வகையிலும் அறுந்துவிடக்கூடாது என்பதில் மைடா அதீத கவனம் செலுத்தி வருகிறது.
அதே சமயத்தில் பிரதான நிறுவனங்கள் மற்றும் சாத்தியத்திற்குரிய உள்நாட்டு விநியோகஸ்தர்கள், வழங்குநர்கள் ஆகியோர் ஒரு குறிப்பிட்ட தொழில்துறைக்கு உட்பட்டு ஒன்றிணைக்கும் பல்வேறு தொழில்துறை சந்திப்புகளை மைடா ஒருங்கிணைத்து வருகிறது.
மேலதிகமாக முதலீட்டு நோக்கம் கொண்ட நிறுவனங்கள் மற்றும் சாத்தியப் பூர்வ நெறியாளர்கள், தொழில்நுட்ப வழங்குநர்கள் ஆகிய தரப்புகளுடன் சிறப்பு சந்திப்புகளையும் அது ஏற்பாடு செய்து வருகிறது.
இந்தத் திட்டங்களின் வெற்றிகள் மலேசியப் பன்னாட்டு நிறுவனங்கள் மேம்பாடு மற்றும் விநியோக நிர்வாகக் கட்டமைப்புகளில் பிரதிபலிக்கின்றது. உள்நாட்டு நிறுவனங்களும் விநியோகஸ்தர்களும் இதில் வெற்றி பெற்றிருப்பதும் இத்திட்டங்களின் நிறைவான வெளிப்பாடாக இருக்கிறது.
பல்வேறு தொழில்துறைகள் மற்றும் தொழில் ஒப்பந்தங்கள் நிலைத்தன்மையுடன் சுமுகமாக நடைபெறுவதற்குரிய ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் மைடா வழங்கி வருகிறது.
இதன் அடிப்படையில் பல உள்நாட்டு விநியோகஸ்தர்கள் அனுபவமிக்க மற்றும் தொழில்திறன் மிக்க மனித வளத்துடன் பொது நிறுவனங்களாக வளர்ச்சி காண்பதற்குரிய நம்பிக்கையை மைடா தந்து கொண்டிருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்கள் உள்நாட்டு நிறுவனங்களை வெற்றி அடையச் செய்திருக்கும் சில உதாரணங்களைக் காண்போம்.
* மருத்துவக் கருவிகள் தொழில்துறை
நாட்டில் செயல்பட்டு வரும் 30க்கும் அதிகமான பன்னாட்டு நிறுவனங்கள் உயர்தர மருத்துவக் கருவிகள் தயாரிப்பில் சம்பந்தப்பட்டிருக்கின்றன.
இவை 200க்கும் அதிகமான உள்நாட்டு எஸ்எம்இ நிறுவனங்களை உருவாக்கி பயன் தரக்கூடிய அளவில் உயர்த்தி விட்டிருக்கின்றன.
- Braun Medical Industries மிக வலுவுடன் அதன் வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கிறது.
உள்நாட்டு விநியோகம் மற்றும் வர்த்தகத்தில் அதன் பங்களிப்பு மிகப்பெரிய அளவில் இருக்கிறது. அதேபோன்று நாட்டில் பிரதான நிறுவனங்களாக வளர்ச்சி பெற்று உயர்ந்த அடைவு நிலையைப் பதிவு செய்திருக்கின்ற சில நிறுவனங்கள் வருமாறு:
Adio Orthopaedics Sdn. Bhd., Straits Orthopaedics (Mfg) Sdn. Bhd., Vigilenz Medical Devices Sdn. Bhd., and OSA Technology Sdn. Bhd., Hospitech Manufacturing Services Sdn. Bhd. and OSA Technology Sdn. Bhd. ஆகிய நிறுவனங்கள் மலேசிய மருத்துவக் கருவிகள் தயாரிப்புத் துறையில் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டு தயாரிப்பாளர்களாகவும் விநியோகஸ்தர்களாகவும் பெயர் பதித்துள்ளன.










