லாடாங் சைம் டார்பி, புக்கிட் புத்ரியில் சனிக்கிழமை முதல் EMCO அமல்

கோலாலம்பூர், நவம்பர் 4 :

நவம்பர் 6 ஆம் தேதி முதல் 19 வரை பகாங்கில் உள்ள லிபிஸ், முக்கிம் பத்து யோன் 1, சைம் டார்பி புக்கிட் புத்ரியில் மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு (EMCO) அமல்படுத்தப்படும்.

சுகாதார அமைச்சகத்தின் இடர் மதிப்பீடு மற்றும் உள்ளூர் கோவிட்-19 நோய்த்தொற்றின் போக்கு ஆகியவற்றை ஆய்வு செய்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் (MKN) இயக்குநர் டத்தோ ரோட்ஸி முஹமட் சாட் ஒரு அறிக்கையின் மூலம் தெரிவித்தார்.

“EMCO அமலிலுள்ள வட்டாரங்களுக்கான நிலையான இயக்க நடைமுறைகள் முன்பு அறிவிக்கப்பட்டதைப் போன்றது” என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், இன்று நாடு முழுவதும் எந்தவொரு EMCO நீட்டிப்பு அல்லது அமல் எதுவும் இல்லை என்று ரோட்ஸி கூறினார்.

– பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here