கூகுள் நிறுவனம் தொடர்ந்து பயனுள்ள அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது என்றுதான் கூறவேண்டும். அதன்படி கடந்த மே மாதம் கூகுள் நிறுவனம் 2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறையை இந்த ஆண்டு இறுதிக்குள் கொண்டுவர இருப்பதாக
கூறியது.
அதன்படி இந்த 2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறையை வரும் நவம்பர் 9-ம் தேதி கொண்டுவர உள்ளது. குறிப்பாக இந்த வழிமுறையை செயல்படுத்திய பின்னர் பயனர் ஒவ்வொரு முறை கூகுள் கணக்கில் லாக்-இன் செய்யும் போதும் குறுந்தகவல் அல்லது மின்னஞ்சலில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய ஒடிபி வரும்.
இதனை பதிவிட்டால் தான் கணக்கில் நுழைய முடியும் என்று கூறப்படுகிறது. கண்டிப்பாகஇந்த அம்சம் பயனுள்ள வகையிலும்,பாதுகாப்பானதாகவும் இருக்கும். வெளிவந்த தகவலின்படி, வரும் நவம்பர் 9-ம் தேதி முதல் 2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறை ஆனது கூகுள் அக்கவுண்டில் தானாகவே அமல்படுத்தப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது. இதை பயனர்களுக்கு மின்னஞ்சல் மூலம் கூகுள் நிறுவனம் தெரியப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கூகுள் நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 150 மில்லியன் கூகுள் பயனர்களின் அக்கவுண்ட்களுக்கு இந்த 2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறையை அமல்படுத்த உள்ளதாக கூறியுள்ளது. கண்டிப்பாக இந்த வசதி மிகவும் பாதுகாப்பான வகையில் இருக்கும் என்று தான் கூறவேண்டும்.