சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட 50 வெள்ளி ரொக்கத்துடனான உணவு பொட்டலங்களின் படங்களுக்கும் மலாக்கா மாநில தேர்தலுக்கும் (PRN) எந்த சம்பந்தமும் இல்லை என்கிறது போலீஸ்

மலாக்கா, நவம்பர் 5 :

எதிர்வரும் நவம்பர் 20 ஆம் தேதி மலாக்கா மாநிலத் தேர்தல் (PRN) நடைபெற உள்ள நிலையில், 50 வெள்ளி ரொக்கத்துடன் இணைக்கப்பட்டிருந்த உணவு உதவிப் பொட்டலங்களின் படங்களுக்கும் , அரசியல் கட்சிகளின் வாக்குச் சேகரிப்பு நடவடிக்கைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று போலீசார் மறுத்துள்ளனர்.

மலாக்கா குற்றப் புலனாய்வுத் துறையின் தலைவர் துணை ஆணையர் அஸ்லான் அபு கூறுகையில், இப்புகைப்படம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், 50 வெள்ளியுடன் இருந்த உணவுப் பொட்டலங்களில் முதியோர்களுக்கான உணவுப் பொருள் இருந்ததைக் தாம் கண்டறிந்ததாகவும், இந்த சம்பவம் மலாக்காவுக்கு வெளியே நடந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

“மலாக்கா காவல்துறையின் மதிப்பாய்வின் விளைவாக, முதியோர்களுக்கு உணவு உதவி மற்றும் RM50 ரொக்கம் விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் குறித்த வீடியோ
பதிவிடப்பட்டிருந்தது, ஆனால் வாக்கு சேகரிப்பு நடவடிக்கையோ அல்லது அரசியல் கட்சியின் எந்த சின்னமோ அல்லது வேறு எந்தவொரு அங்கமோ அந்த வீடியோவில் கண்டறியப்படவில்லை.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதுவரை காவல்துறைக்கு இந்த சம்பவம் குறித்து எந்த புகாரும் வரவில்லை என்றார்.

நேற்று, சமூக ஊடகங்களில் பல உணவுப் பொட்டலங்களைக் காட்டும் வீடியோ, படங்களும் RM50 ரொக்கம் மற்றும் மலாக்காவில் நடந்ததாகக் கூறும் புகைப்படத் தலைப்புகளையம் வெளியிட்டிருந்தன. மேலும் இந்த உதவித் திட்டம் வாக்குகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டது என்று கூறும் கருத்துக்களும் இடம்பெற்றிருந்தன .

தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998ன் பிரிவு 233ன் கீழ், தவறான அல்லது உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்பியதற்காக இவ்வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்ட்டுள்ளதாக அஸ்லான் கூறினார்.

சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அல்லது தெரிந்தவர்கள், விசாரணை அதிகாரி, இன்ஸ்பெக்டர் எம்டி அஸ்யுக்ரி சைனியை 016-7530492 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மேலதிக விசாரணைகளுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்.

“பொதுமக்கள் தங்கள் சொந்த நலனுக்காக எந்த ஒரு தவறான தகவலையும் பரப்ப வேண்டாம், இவ்வாறு பொய்த்தகவல்களை பரப்புபவர்கள் மீது சமரசமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றும் அவர் கூறினார்.

– பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here