40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம் -கைரி ஜமாலுடின்

கோலாலம்பூர், நவம்பர் 10 :

இன்று முதல் 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசியின் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பூஸ்டர் தடுப்பூசியைப் பெறுவதற்கு பொதுமக்கள் MySejahtera செயலி மூலம் அதற்கான சந்திப்பைப் பெறுவார்கள் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

“இப்போது நாங்கள் மலேசியாவில் உள்ள மக்களுக்கு தேசிய COVID-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் (PICK) பூஸ்டர் அல்லது பூஸ்டர் டோஸை செலுத்த தொடங்கியுள்ளோம்.

“தகுதியானவர்கள் அதாவது 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் உடல்நலக்குறைபாடு அல்லது நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் தமது பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம்” என்று தனது டூவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here