மலேசியாவும் இந்தோனேசியாவும் தலைநகரங்கள் மற்றும் பாலி தீவு போன்ற முக்கிய பகுதிகளின் விடுமுறை பயணத்தை முதலில் தொடங்கி, படிப்படியாக இதர பயண வழித்தடத்தை அறிமுகப்படுத்த ஒப்புக்கொண்டதாக இரு நாட்டுத் தலைவர்களும் புதன்கிழமை தெரிவித்தனர்.
இந்தோனேசியாவிற்கு தனது முதல் உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தை மேற்கொண்ட பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் பேசுகையில், காலாவதியான அனுமதியின் பேரில் நாட்டில் பணிபுரியும் இந்தோனேசிய குடியேறியவர்களுக்கு தனது அரசாங்கம் பொதுமன்னிப்பு அளிக்கும் என்றும் கூறினார்.




















