இன்று சபாவின் தினசரி கோவிட்-19 தொற்றுக்களின் எண்ணிக்கை ஆறு மாதங்களுக்கு பின் 200க்குக் குறைவாக பதிவு

கோத்தா கினாபாலு, டிசம்பர் 12 :

சபாவில் இன்று 197 புதிய கோவிட் -19 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன, இது கடந்த ஜூன் 29 ஆம் தேதிக்கு பின்னர் மாநிலத்தில் பதிவான மிகக் குறைந்த தினசரி எண்ணிக்கையாகும்.

சபா கோவிட்-19 செய்தித் தொடர்பாளர் டத்தோ மசிடி மஞ்சுன் கூறுகையில், நேற்றுடன் ஒப்பிடும்போது இன்று 90க்கும் மேற்பட்ட தொற்றுக்கள் குறைந்துள்ளன.

“இன்று, சபாவின் 8 மாவட்ங்களில் எந்த தொற்றும் பதிவாகவில்லை.மேலும் தலா 10க்கும் குறைவான தொற்றுக்கள் 13 மாவட்டங்களில் பதிவாகின.

“கோத்தா கினாபாலு (-30), பாப்பர் (-20), ரானாவ் (-11), புட்டடன் (-19) மற்றும் தெனோம் (-7) உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொற்றுக்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளது” என்று இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இன்று கோவிட் -19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 12 வயதுக்குட்பட்ட 43 குழந்தைகள்; தடுப்பூசி செலுத்தாத 17 பேர்;ஒரு தடுப்பூசி செலுத்திக்கொண்ட 2 பேர் ; முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட 131 பேர்; மற்றும் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட4 பேர் ஆகியோர் அடங்குவர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் நேற்று முதல் சபாவின் தொற்று விகிதம் 0.87 ஆக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here