இந்த 2 பழங்களை ஃப்ரிட்ஜில் வைக்காதீங்க… ஏன் தெரியுமா?

மாம்பழம், தர்பூசணி போன்ற உணவுகளை குளிர்சாதன பெட்டியில வைக்கவே கூடாது. இது உங்களில் பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.

பெருகி வரும் விஞ்ஞான வளர்ச்சியில் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய பல சாதனங்கள் வந்து விட்டது. இதனால் எவ்வளவு நன்மை இருக்கிறதோ அந்த அளவிற்கு தீமையும் இருக்கிறது. ஆனாலும் பெரும்பாலான மக்கள் பல சாதனைங்களை விரும்பி பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் குளிர்சாதப்பெட்டி இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லிவிடலாம். காய்கறிகள் பழங்கள் கெட்டப்போகாமல் இருக்க குளிர்ச்சாதனப்பெட்டி ஒரு இன்றியமையாத தேவையாக உள்ளது.

அதிலும் கோடை காலத்தில் இதன் தேவை மிகவும் அதிகம். வெப்பம் அதிகமாக இருக்கும் நிலையில், வெளியில் சென்று வருபவர்கள் நேராக வந்து குளிர்ந்த நீரைத்தான் தேடுவார்கள். மேலும் வெப்பநிலை அதிகரிப்பின் காரணமாக காய்கறிகள் அழுகிவிடும் என்பதால், அதனை குளிர்சாதன பெட்டியில் பாதுகாப்பாக வைத்து பயன்படுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் எல்லா உணவுப் பொருட்களையும் குளிர்சாதன பெட்டியில் எப்போதும் வைத்து பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை.

அவ்வாறு செய்யும்போது சில நேரங்களில், உணவின் சுவையை மாறி உடல் ஆரோக்கியத்தை பாழாக்கிவிடும். இதில் குறிப்பாக மாம்பழம், தர்பூசணி போன்ற உணவுகளை குளிர்சாதன பெட்டியில வைக்கவே கூடாது. இது உங்களில் பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் இதுதான் நிதர்சனமான உண்மை. கோடைக்காலத்தில் தர்பூசணி, முலாம்பழம் மற்றும் மாம்பழங்களின் வரத்து அதிகமாக இருக்கும் காலம். இந்த பழங்களை வெளியில் இருந்து வாங்கி வரும் மக்கள் அதனை கழுவி குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைப்பார்கள்.

இதனால் அவற்றின் சுவை பாதிக்கும் என்பது நம்மில் எத்தனைபேருக்கு தெரியும?  பொதுவாக குளிர்ச்சியை தரும் பழமான  தர்பூசணியை அதிக குளிர்ச்சியில் உள்ள குளிர்சாதன பெட்டியில் வைக்கும்போது அதன் சுவை வேறு மாதிரி இருக்கும். அப்படியே வைக்க வேண்டிய கட்டாயம் வந்தாலும், அதனை வெட்டாமல் குளிர்சாதன பெட்டியில் வைக்க கூடாது.

அப்படி வெட்டாமல் வைத்தால், பழத்தின் சுவை மற்றும் அதன் நிறம் மாறிவிடும். மேலும், பழங்களை அப்படியே குளிர்சாதன பெட்டியில்  வைத்தால் உள்ளே பாக்டீரியாக்கள் பெருகும் என்ற அச்சமும் உள்ளது.

மாம்பழம் மற்றும் முலாம்பழங்களை முதலில் வெட்டாமல் ஃப்ரிட்ஜில் வைக்காதீர்கள். நீங்கள் அவற்றை வாங்கியவுடன், குளிர்ந்த நீரில் சிறிது நேரம் ஊறவைத்து, சிறிது நேரம் அறை வெப்பநிலையில் வைக்கவும். பழத்தை ருசிப்பதற்கு முன், அவற்றை வெட்டி குளிர்சாதன பெட்டியில் சிறிது நேரம் வைத்திருக்கலாம். வெட்டப்பட்ட பழங்களை மூடி வைக்க மறக்காதீர்கள். அவற்றை திறந்து வைத்தால அதில் பாக்டீரியா பரவ வாய்ப்புள்ளது.

பழங்கள் மற்றும் காய்கறிகளை ஒரே அலமாரியில் சேமித்து வைப்பது தவறான ஒன்று என்பதை அறிந்து கொள்வது அவசியம். நீங்கள் எப்போதும் தனித்தனி கூடைகளில் தனித்தனியாக அடுக்கி வைக்க வேண்டும். அவை பல்வேறு வகையான வாயுக்களை வெளியிடுவதால் அவற்றை ஒன்றாக சேமித்து வைப்பது அவற்றின் சுவையின் தரத்தை பாதிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here