சீனாவில் 116 வருடங்களின் பின்னர் பதிவாகியுள்ள மிகக்கடுமையான பனிப்பொழிவு

வடகிழக்கு சீனாவில் 116 வருடங்களின் பின்னர் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. 1905 இன் பின்னர் பதிவாகியுள்ள அதிகூடிய பனிப்பொழிவு இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடகிழக்கு சீனாவில் வெப்பநிலை சில பகுதிகளில் 14 டிகிரி செல்சியஸ் வரை குறைவடைந்துள்ளதுடன், லியோனிங் நகரமான அன்ஷானில் அதிகபட்சமாக 53 செமீ (21 அங்குலம்) பனி தடிமன் பதிவாகியுள்ளது.

பனிப்புயல் ஏற்படும் வாய்ப்புள்ளதால், வடகிழக்கு சீனாவின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சில நகரங்களைத் தவிர்த்து பெரும்பாலான நெடுஞ்சாலைகளிலும், ரயில் நிலையங்களிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மக்கள் வீடுகளை கதகதப்பாக வைத்துகொள்வதற்காக நிலக்கரி இறக்குமதி அதிகரிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here