2.98 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள கடத்தல் சிகரெட்டுகள் போலீசாரால் பறிமுதல் ; 46 வயதான உள்ளூர் ஆடவர் கைது

தைப்பிங், நவம்பர் 13 :

நேற்று இங்குள்ள சாங்காட் ஜெரிங்கில், கடல்சார் போலீசார் நடத்திய சோதனையின் போது 2.89 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள 21,210 அட்டைப்பெட்டிகளில் இருந்த கடத்தல் சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

கம்போங் ஆச்சே கமாண்டர் பிராந்தியம் 1, உதவி ஆணையர் ஷம்சோல் காசிம் இதுபற்றிக் கூறுகையில், Op Kontraban சோதனையானது கடல் புலனாய்வுப் பிரிவு (URM) மற்றும் PPM பிராந்தியம் 1 ஆகிய பிரிவுகள் இணைந்து மேற்கொண்டன.

தமது துறைக்கு கிடைத்த ஒரு ரகசிய தகவலின் பேரில், மாலை 6 மணியளவில், சங்கத் ஜெரிங்கில் உள்ள ஒரு வீட்டைச் சுற்றி வளைத்ததாகவும் கடத்தல் சிகரெட்டுகள் வைத்திருந்ததற்காக 46 வயதான உள்ளூர் ஆடவரை கைது செய்ததாக ஷம்சோல் கூறினார்.

“வீடு மற்றும் அதன் ஸ்டோர் அறையில் மேலும் சோதனை செய்த குழு, 6,550 அட்டைப்பெட்டிகளில் வெள்ளை சிகரெட்டுகள் மற்றும் 2,710 கிரெடெக் சிகரெட்டுகள் ஆகியவற்றைக் கண்டறிந்தது,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அந்த நபர், தனது வீட்டின் பின்னால் கைவிடப்பட்ட நிலையிலிருந்த 10 டன் எடையுள்ள நிசான் லோரிக்கு கடல்சார் போலீசாரை அழைத்துச் சென்றதாக ஷாம்சோல் கூறினார்.

“லோரியில் மேலும் சோதனை செய்த குழு, 7,800 வெள்ளை சிகரெட்டுகள் மற்றும் 4,150 க்ரெட்டெக் சிகரெட்டுகள் ஆகியவற்றைக் கண்டுபிடித்தது.

அந்த நபர் பினாங்கில் இருந்து கடத்தப்பட்ட சிகரெட் விநியோகத்தைப் பெற்றதாகவும், அவற்றை உள்ளூர் சந்தையில் விநியோகிப்பதற்கு முன்பு தனது லோரியில் வைத்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது என்று ஷம்சோல் கூறினார்.

“நாங்கள் அந்த நபரைக் கைது செய்துள்ளோம், அவர் மேலதிக நடவடிக்கைக்காக தைப்பிங் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்,” என்று அவர் கூறினார்.

கடத்தப்பட்ட சிகரெட்டுகளை வைத்திருந்தது அல்லது விற்றது தொடர்பாக சுங்கச் சட்டம் 1967 பிரிவு 135(1)(d)-ன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here