பிரதமர் கலந்து கொண்ட பாரிசான் நேசனல் (BN) கட்சி நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளருக்கு RM20,000 அபராதம்

மலாக்கா, நவம்பர் 14 :

பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கலந்து கொண்ட பாரிசான் நேசனல் (BN) நிகழ்வின் ஏற்பாட்டாளருக்கு SOPயை மீறியதற்காக 20,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

மேடான் செலேரா செலண்டாரில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சிக்காக, அசஹான் வாக்குச் சாவடி மையத்தின் BN தலைவருக்கு அபராதம் வழங்கப்பட்டதை ஜாசின் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி உறுதிப்படுத்தினார்.

“சமூக மற்றும் தனி நபர் இடைவெளியை உறுதிப்படுத்த தவறியதற்காக அந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்தநிகழ்ச்சியில் BN ஆலோசனைக் குழுத் தலைவர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கும் BN கூட்டணியின் பிரச்சாரத் திட்டத்தின் கீழ், உள்ளூர் மக்களை சந்தித்து வாழ்த்துரை வழங்கியிருந்தார்.

மேலும் நண்பகலில் இந்நிகழ்ச்சிக்கு வந்த பிரதமர் இஸ்மாயில் சப்ரிக்கு 60 ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் மற்றும் அவர் உள்ளூர் மக்களை சந்தித்து ஒரு மணி நேரம் செலவிட்டனர்.

கடந்த நவம்பர் 8ஆம் தேதி முதல் மாநிலத் தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய பிறகு, பிரதமர் அம்மாநிலத்திற்கு வருவது இதுவே முதல்முறை.

பிரதமர் இருந்த ஒரு மணி நேர அமர்வு முழுவதும், பிரதமர் மற்றும் பெக்கான் எம்.பி.யை பார்க்க உள்ளூர் மக்கள் குவிந்தனர்.

நவம்பர் 8 ஆம் தேதி, மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான கடுமையான வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது, இதில் கோவிட்-19 பரவுவதைத் தடுக்கவும்,நடைபயணங்கள் மற்றும் மக்களை அவர்களின் வீடுகளுக்குச் சென்று பார்வையிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here