நாட்டில் 80.4 விழுக்காடு பதின்ம வயதினர் கோவிட்-19க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்

கோலாலம்பூர், நவம்பர் 16 :

நாட்டில் கோவிட்-19 க்கு எதிராக 80.4 விழுக்காடு இளம் பருவத்தினருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

CovidNow வலைத்தளத்தின் நேற்றைய நிலவரப்படி, 12 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களில் 80.4 விழுக்காட்டினர் அல்லது 2,531,793 பேர் முழுமையாக தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளனர், அத்தோடு 87 விழுக்காட்டினர் அல்லது 2,740,442 பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

கோவிட்-19 தேசிய நோய்த்தடுப்புத் திட்டக் (NIP) குழுவின் இந்த சாதனைக்காக
சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

“மலேசியாவின் இளம் பருவத்தினரில் சுமார் 80 விழுக்காட்டினருக்கு வெறும் 70 நாட்களில் இத்தடுப்பூசி போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் நேற்றைய நிலவரப்படி, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 76.1 விழுக்காட்டினர் அல்லது 24,849,925 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் 78.4 விழுக்காட்டினர் அல்லது 25,615,627 நபர்களுக்கு குறைந்தது ஒரு டோஸ் பெற்றுள்ளனர்.

நாட்டில் இன்னும் 7,317,045 நபர்கள் தடுப்பூசி போடப்படாமல் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here