மலாக்கா மாநில தேர்தலில் 18 இடங்களை வென்று தனித்து ஆட்சி அமைக்க முடியும் ; BN நம்பிக்கை

மலாக்கா, நவம்பர் 17:

மலாக்கா மாநிலத் தேர்தலில் மொத்தமாகவுள்ள 28 இடங்களில் பாரிசான் நேசனல் (BN) 18 இடங்களை வெற்றி பெற்று, தனித்து ஆட்சி அமைக்க முடியும் என BN தேர்தல் இயக்குநரும், துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ முஹமட் ஹசான் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நம்பிக்கையானது பிரச்சார காலத்தில் தமது கட்சி நடத்திய ஆய்வுகளின் அடிப்படையிலானது அத்தோடு 11 முதல் 14வது பொதுத் தேர்தல்கள் (GE14) வரை வாக்காளர்கள் BNக்கு தொடர்ந்து தமது வாக்குகளை அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.

“நாங்கள் 20 இடங்களை வெல்ல முயற்சிக்கிறோம். கண்டிப்பாக 13 இடங்களைத் தக்கவைக்க முடியும் (GE14 இல் வென்றது) மேலும் ஐந்து இடங்களைச் சேர்த்து 18 இடங்களை உருவாக்குவதே எங்கள் இலக்கு’ என்றார்.

“ஆனால் நாங்கள் 15 இடங்களுக்கு அதிகமாக வெல்ல முடிந்தால் (எளிமையான பெரும்பான்மைக்கு), நாங்கள் சொந்தமாக தனி அரசாங்கத்தை அமைக்க முடியும் அவ்வாறு நடந்தால் நாம் மக்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்”.என்று அவர் கூறினார்.

முதல்வர் டத்தோஸ்ரீ சுலைமான் எம்.டி அலிக்கு அளித்த ஆதரவை நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வாபஸ் பெற்றதையடுத்து, கடந்த அக்டோபர் 4-ம் தேதி மலாக்காமாநில சட்டப் பேரவை கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து மாநிலத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

28 தொகுதிகளிலும் முறையே UMNOவிலிருந்து 20 வேட்பாளர்களும் MCAயிலிருந்து 7 வேட்பாளர்களும் MICயிலிருந்து 1 வேட்பாளரும் களமிறங்கியுள்ளனர்.

மேலும் நவம்பர் 20-ம் தேதி வாக்குப்பதிவு இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

— பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here