கோலாலம்பூர், நவம்பர் 20 :
சினோவாக் (Sinovac) தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் தங்களுடைய பூஸ்டர் தடுப்பூசியை விரைந்து செலுத்திக்கொள்ளுமாறு சுகாதார அமைசர் கைரி ஜமாலுடின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Sinovac தடுப்பூசி பயனுள்ளதாக இருக்கும் அதேவேளை, அதன் செயல்திறன் விரைவில் குறைந்து வருவதற்கான சான்றுகள் உள்ளன என்று ஒரு டுவீட்ட்ர் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
” Sinovac (3 மாதங்கள்) Vs Pfizer / Astrazeneca (6 மாதங்கள்) Sinovac தடுப்பூசிக்கு ஏன் குறுகிய இடைவெளி? காரணம் அதன் செயல்திறன் விரைவில் மாறும் சான்றுகள் உள்ளன.
“இது Sungai Buloh மருத்துவமனையில் வகை 4 மற்றும் 5 வாராந்திர சேர்க்கை தரவுகள் உள்ளது. அதனை அடிப்படையாக கொண்டே, நீங்கள் பூஸ்டர் தடுப்பூசியை விரைவாக செலுத்திக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
நோய்த்தடுப்பு வாரத்தின் 35 முதல் 45 வாரங்களின் தரவின்படி , Sinovac தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களே சுங்கை புலோ மருத்துவமனையில் அதிகமாக கோவிட் -19 காரணமாக அனுமதிக்கப்பட்டனர்.
35 ஆவது வாரத்தில், வகை 4 மற்றும் 5 இல் Sinovac தடுப்பூசியை நிறைவு செய்த 48 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதே வாரத்தில், வகை 4 மற்றும் 5 இல் Pfizer / Astrazeneca தடுப்பூசியை நிறைவு செய்த 15 பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
36 ஆவது வாரத்தில், வகை 4 மற்றும் 5 இல் Sinovac தடுப்பூசியை நிறைவு செய்த 86 பேரும், Pfizer தடுப்பூசியை நிறைவு செய்த 5 பேர் மற்றும் Astrazeneca தடுப்பூசியை நிறைவு செய்த 7 பேரும் அனுமதிக்கப்பட்டனர்.
37ஆவது வாரத்தில், வகை 4 மற்றும் 5 இல் Sinovac தடுப்பூசியை நிறைவு செய்த 58 பேரும், Pfizer தடுப்பூசியை நிறைவு செய்த 11 பேர் மற்றும் Astrazeneca தடுப்பூசியை நிறைவு செய்த ஒருவரும் அனுமதிக்கப்பட்டனர்.
38 ஆவது வாரத்தில், வகை 4 மற்றும் 5 இல் Sinovac தடுப்பூசியை நிறைவு செய்த 62 பேரும், Pfizer தடுப்பூசியை நிறைவு செய்த 12 பேர் மற்றும் Astrazeneca தடுப்பூசியை நிறைவு செய்த 11 பேரும் அனுமதிக்கப்பட்டனர்.
39 ஆவது வாரத்தில், வகை 4 மற்றும் 5 இல் Sinovac தடுப்பூசியை நிறைவு செய்த 65 பேரும், Pfizer தடுப்பூசியை நிறைவு செய்த 10 பேர் மற்றும் Astrazeneca தடுப்பூசியை நிறைவு செய்த 5 பேரும் அனுமதிக்கப்பட்டனர்.
40 ஆவது வாரத்தில், வகை 4 மற்றும் 5 இல் Sinovac தடுப்பூசியை நிறைவு செய்த 81 பேரும், Pfizer தடுப்பூசியை நிறைவு செய்த 12 பேர் மற்றும் Astrazeneca தடுப்பூசியை நிறைவு செய்த 5 பேரும் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த தரவுகளை அடிப்படையாகக்கொண்டே அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.